ராஜஸ்தானில் தனியார் பள்ளி ஒன்றில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சிறுவன் பானையில் ஆதிக்கச் சாதியினர் குடிக்கும் தண்ணீர் பானையிலிருந்து தண்ணீரை எடுத்து குடித்ததற்காக ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் சுரானா கிராமத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் இந்திரா மேக்வால். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் அருகே உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்தார். இந்த சிறுவன் கடந்த ஜூலை 20ஆம் தேதி பள்ளியில் உள்ள குடிநீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்துள்ளார். இதை அப்பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர் சயில் சிங் பார்த்த நிலையில், பட்டியல் சமூக சிறுவன் பானையில் இருந்து நீர் எடுத்து குடித்தான் என்ற காரணத்திற்காகவே அவனை கடுமையாக தாக்கி அடித்துள்ளார்.
இந்த கொடூர தாக்குதலில் 9 வயது சிறுவன் நிலை குலைந்து மயங்கி விழுந்துள்ளார். முதலில் அந்த சிறுவன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் உயத்பூர் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அங்கும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கிருந்து அவர் அகமதாபாத் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கும் அந்த சிறுவன் உடல் நலம் தேராத நிலையில் நேற்று தாக்குதலுக்கு ஆளான சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சிறுவனை அடித்த ஆசிரியர் மீது எஸ்.சி/ எஸ்.டி வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
ஜாலோரின் சைலா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் மாணவர் ஒருவர் உயிரிழந்தது சோகமானது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு எதிராக கொலை மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: hindustantimes
தேசியக்கொடி ஏற்றிய இளைஞர்கள் | ஜெயிலில் தள்ளிய ஆர்.எஸ்.எஸ் | Aadhavan Dheetchanya | RSS | BJP | Modi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.