பொது இடத்தில் தண்ணீர் குடித்த பட்டியலின இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் திக்கா என்ற பகுதியை சேர்ந்த சதுரராம் மேக்வால் என்பவர் தனது பண்ணையில் இருந்து தனது மனைவியுடன் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் இருந்து தண்ணீரை அவர் குடித்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை: பொதுப்பாதையில் பிணத்தைத் தூக்கிச் செல்ல போராடிய தலித் மக்கள்
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை கட்டை மற்றும் கம்பிகளால் கடுமையாக தாக்கியுள்ளனர். பட்டியலின சமூகத்தை சேர்ந்த ஒருவர் பாத்திரத்தில் இருந்து தண்ணீரை குடித்ததால் அவரை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சதுரராம் மேக்வாலுக்கு தலை, முதுகு மற்றும் விலா எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த இளைஞர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞரின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், சாதிவெறி வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக அவர் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பட்டியல்/ பழங்குடிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகப் பணக்காரர் வரிசை – இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார் கௌதம் அதானி
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் 9 வயது பட்டியலின சிறுவன் ஒருவர் வகுப்பறையில் இருந்து தண்ணீரை குடிக்க பானையை தொட்டதால் அடித்துக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya Krishnamurthy explains the historical contribution of Arignar Anna on his Birthday | Aransei
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.