Aran Sei

மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அழுத்தம் கொடுத்த மோடி – இலங்கை மின்சார வாரியத் தலைவர் வாக்குமூலம்

Credit: The Wire

500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை நேரடியாக அதானி குழுமத்திற்கு வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னிடம் கூறியதாக என்று நாடாளுமன்ற குழு முன்பு இலங்கை மின்சார வாரிய தலைவர் எம்எம்சி பெர்டினாண்டோ, வாக்குமூலம் அளித்துள்ளார்.

News1st செய்தி தொலைக்காட்சி பதிவிட்ட வாக்குமூல காணொளியின்படி, “நவம்பர் 24, 2021 அன்று, ஒரு கூட்டத்திற்குப் பிறகு, ஜனாதிபதி என்னை வரவழைத்து, திட்டத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு இந்தியப் பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறியதாக என்று ஃபெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு கடற்கரையில் 500 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்கு அதானி குழுமம் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறித்து பொதுத் துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் மற்றும் மற்றொரு உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் ஆகியவற்றில் இலங்கையின் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இந்த விடயம் இலங்கை மின்சார வாரியத்துக்கு சம்பந்தப்பட்டதல்ல, முதலீட்டுச் சபைக்கு சம்பந்தப்பட்டது என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். ஆனால், நான் அதைப் கவனிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் தேவையானவற்றை செய்யுமாறு அதிபர் அறிவுறுத்தியதாக நிதிச் செயலாளருக்கு கடிதம் அனுப்பினேன். இது அரசாங்கத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் என்பதை நான் சுட்டிக்காட்டினேன்” என்று தெரிவித்துள்ளார்.

விசாரணையில், காற்றாலை மின்சார ஒப்பந்தம் “கோரிக்கப்படாதது” என்று கருதப்படுமா என்று குழுவின் தலைவர் சரித ஹேரத் கேட்டக் கேள்விக்கு பதிலளித்த அவர், ஆம், இது அரசாங்கத்திற்கு இடையேயான ஒப்பந்தம், ஆனால் பேச்சுவார்த்தைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்த விலைக் கொள்கையின்படி நடக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன? – ஜோதிகுமார்

2021 ஆம் ஆண்டு நவம்பரில் இந்த திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்ற மோடியின் கோரிக்கை குறித்து ஜனாதிபதி ராஜபக்சே தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற குழுவிடம் ஃபெர்டினாண்டோ தெரிவித்துள்ள நிலையில், மன்னார் மற்றும் பூனேரியில் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்தானது.

அதானி நிறுவனத்திடம் இந்தத் திட்டத்தை ஒப்படைத்தது குறித்து எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை விடுத்தன. 

“அதானி குழுமம் இலங்கைக்குள் நுழைவதற்கான பின் கதவைத் தேர்ந்தெடுத்துள்ளதை ஆழ்ந்த வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம். போட்டியைத் தவிர்ப்பது நாம் தயவாக எடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. இது நமது சீர்குலைந்த பொருளாதாரத்தை பாதிக்கிறது, பணம் செலுத்தும் நிலுவை பிரச்சினைகளை மோசமாக்குகிறது, மேலும் நமது குடிமக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்துகிறது” என்று சமகி ஜன பலவேகயா கட்சியின் தலைமை நிர்வாகி அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா: ராஜபக்சே வீட்டை கொளுத்திய போராட்டக்காரர்கள்

முதலில் ஒரு யூனிட் மின்சாரத்தை 6.5 அமெரிக்க செண்டுக்கு விற்க அதானி குழுமம் முன்வந்தது. ஆனால் தற்போது 7.55 அமெரிக்க செண்டுக்கு விற்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை மின்சார வாரிய பொறியாளர் சங்கத் தலைவர் அணில் ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை மின்சார வாரிய ஊழியர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர், சௌமிய குமாரவாடு, “போட்டி ஒப்பந்தத்தின் கீழ், ஒரு யூனிட் 4 சென்ட் அல்லது அதற்கும் குறைவான விலையில் மின்சாரத்தை விற்க ஒரு காற்றாலை ஆலையை நிர்மாணிக்க முடியும். 7.55 சென்ட் என்பது இரு மடங்கு விலையாகும். 25 ஆண்டுகளில், இதன் மதிப்பு அது சுமார் 400 கோடி அமெரிக்க டாலர் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

Source: The Wire

தூய்மையான இனம் Jeevasagapthan Interview | Periyar | RN Ravi | Modi | BJP

 

மின் திட்டத்தை அதானிக்கு வழங்க அழுத்தம் கொடுத்த மோடி – இலங்கை மின்சார வாரியத் தலைவர் வாக்குமூலம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்