Aran Sei

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா: குழந்தை உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியால் அமைக்கப்பட்ட இந்திய குழந்தைகள் பாதுகாப்பு மன்றம், பெண்களுக்கான திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை எதிர்த்ததோடு, திருமண வயதை அதிகரிப்பதற்கு முதலில் கல்வி கற்பிக்கப்படும் அளவை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

இந்திய குழந்தைகள் பாதுகாப்பு மன்றத்தில், 70 சிவில் சமூக அமைப்புகள் உள்ளன. இந்த கூட்டமைப்பின் சார்பில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வினய் சகஸ்ரபுத்தே தலைமையிலான கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முன் தனது சமர்ப்பிப்புகளை முன்வைத்துள்ளது.

பெண்களின் திருமண வயது குறித்த ஆய்வுக்குழுவில் ஒரேயொரு பெண் – மறுக்கப்படுகிறதா பெண்களின் பிரதிநித்துவம்?

குழந்தை திருமணங்கள் தடுப்புச் சட்டம் 2005, நாட்டில் குழந்தை திருமணங்களைத் தடுக்கத் தவறிவிட்டது என்று இந்திய குழந்தைகள் பாதுகாப்பு மன்றம் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளது.

2016 மற்றும் 2020 க்கு இடையில் குழந்தை திருமணங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2,530 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 2019-2021 இல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 23.3% பெண்கள் சட்டப்பூர்வ திருமண வயதான 18 வயதை அடைவதற்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

பெண்களின் திருமண வயது உயர்வுக்கு பொது சிவில் சட்டமே நோக்கம் – திருமாவளவன்

இன்னமும் பல மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்காமல் இடைநிற்றல் ஆவதை தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். 18 வயது வரை உள்ள மாணவிகளுக்கு இலவச கல்வி வழங்கப் பட வேண்டும் என இந்திய குழந்தைகள் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.

பெண்களின் திருமண வயதை 21 ஆக அதிகரிப்பதன் மூலம், இளம் வயதினரை, குறிப்பாக அவர்களின் பெற்றோரின் சம்மதத்திற்கு எதிராக திருமணம் செய்து கொள்பவர்களை குற்றவாளிகளாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் என்று இந்திய குழந்தைகள் பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது.

Source : The Hindu

கலைஞரை வசைபாடும் சாதிவெறியர்கள் | Makizhnan | Indra Kumar

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தும் மசோதா: குழந்தை உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்