Aran Sei

12 மணி நேரம் வேலை பார்க்கும் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் – காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மே 31ஆம் தேதி வேலை நிறுத்தம்

தென்மேற்கு ரயில்வே மண்டலம் முழுவதும் உள்ள 1240 ஸ்டேஷன் மாஸ்டர்களில் பெரும்பான்மையானவர்கள், மே 31-ம் தேதி வேலையைப் புறக்கணித்து ஒரு நாள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். தெற்கு மண்டலத்தில் மட்டும் ஏறத்தாழ 20% காலியிடங்கள் இருப்பதாக இந்திய ரயில்வேயின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

லோகோ பைலட்கள் ரயில்களை எந்த நிலையத்திலும் நிறுத்த  முடியாது என்பதால், ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்கர் பரிஷத் வழக்கு: சிறை அதிகாரிகள் மனிதாபம் இல்லாமல் நடத்துவதை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடும் சாகர் தத்யாராம்

அகில இந்திய ஸ்டேஷன் மாஸ்டர்கள் சங்கத்தின் பொது மேலாளர் பி.எம்.ஜெயன்னா,  பெங்களூரு பிரிவுத் தலைவர் சி.நெடுமாறன் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

வரதட்சணை வாங்குவதை விட கேவலமானது வேறு எதுவும் இல்லை: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கருத்து

“ஏறத்தாழ 20% காலியிடங்கள் நிரப்பப்படாததால் ஸ்டேஷன் மாஸ்டர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. 1503 பணியிடங்களில், 1240 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்டேஷன் மாஸ்டர்களுக்கு வார விடுமுறை கிடைப்பது கடினம், அதே போல் விடுமுறையும் பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது. மூன்று ஷிப்டுகளுக்குப் பதிலாக, பெரும்பாலான ஸ்டேஷன்களில் 12 மணி நேர வேலையை வைத்து இரண்டு ஷிப்ட்களில் வேலை செய்கிறோம். இது பணியளருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும்,  நம் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.” என்று பி.எம்.ஜெயன்னா தெரிவித்துள்ளார்.

Source: Thenewindianexpress

திராவிட இயக்கத்தை அழிக்க துடித்த பார்ப்பன ஊடகங்கள் Dr Kantharaj Interview

12 மணி நேரம் வேலை பார்க்கும் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்கள் – காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மே 31ஆம் தேதி வேலை நிறுத்தம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்