Aran Sei

வெறுப்புணர்வின் சுவரை உடைத்து, நாட்டை ஒன்றிணைப்பதே ராகுல்காந்தி யாத்திரையின் நோக்கம் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா

தேர்தலில் வெற்றிபெற நாட்டில் உள்ள மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது என்று பரூக் அப்துல்லா கூறினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் என்ற நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த நடைப்பயணம் பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

ஜம்முவில் நடைபெற்றுவரும் இந்த பாதயாத்திரையில் ராகுல்காந்தியுடன் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

கர்நாடகா: உங்கள் மகனை தீவிரவாதியின் பெயரை கூறி அழைப்பீர்களா? – பேராசிரியருக்கு பாடம் எடுத்த மாணவன்

அப்போது அவர், “வெறுப்புணர்வின் சுவரை உடைத்து, நாட்டை ஒன்றிணைப்பதே ராகுல்காந்தி யாத்திரையின் நோக்கம். தான் நமது முன்னோர்களின் கனவு அதற்காக அவர்கள் செய்த தியாகத்திற்காக ஒவ்வொருவரின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பது இந்த யாத்திரையின் செய்தி.

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக நாட்டில் மக்களிடையே வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. இந்த அணுகுமுறை நாட்டையும், மக்களையும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லாது. அது அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும். எனது சகோதரர்கள் (காஷ்மீரி பண்டிட்கள்) இந்த இடத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. நான் மரணிப்பதற்கு முன் அவர்கள் மீண்டும் அவர்களின் வீடுகளுக்கு மரியாதையுடன் வரும் சூழ்நிலை ஏற்பட வேண்டும் என்பது எனது விருப்பம்” என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Source : the print

இந்தி திணிக்கிற கனவு கண்டிப்பா நடக்காது | Hindi Imposition | Vikraman Interview | Maruthaiyan

வெறுப்புணர்வின் சுவரை உடைத்து, நாட்டை ஒன்றிணைப்பதே ராகுல்காந்தி யாத்திரையின் நோக்கம் – ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்