டெல்லியில் பாலியல் வன்கொடுமை கொல்லப்பட்ட 9 வயது பட்டியலின சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்த புகைப்படத்துடன் ராகுல் காந்தி பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு, விதிமுறை மீறல் எனக்கூறி பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.
சிறுமியின் குடும்பத்தைச் சந்தித்த புகைப்படத்தைப் பகிர்ந்த ராகுல் காந்தி, ”பெற்றோர்களின் கண்ணீர் ஒரு விசயத்தைக் கூறுகிறது. இந்த நாட்டின் மகளான அவர்களது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதிக்கான பாதையில் நான் அவர்களுடன் இருக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவு போக்சோ சட்டத்திற்கு எதிரானதாக உள்ளது என குற்றம்சாட்டியிருந்த குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம், பதிவு தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது.
இதனை அடுத்து ராகுல் காந்தியின் அந்த ட்விட்டர் பதிவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.
இதே போன்று கடந்த காலத்தில் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்க்பட்ட பெண்ணின் காணொளியைப் பாஜக பிரமுகர் அமித் மால்வியா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் பதிவை ட்விட்டர் நிறுவனம் நீக்கவில்லை.
இந்திய தண்டனைச் சட்டத்தின்படி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள்வரை தண்டனை விதிக்கலாம் என்று இருக்கும் நிலையில், அமித் மால்வியாவிற்கு தேசியப் பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா ஆதரவு தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், “பாலியல் வன்கொடுமை நடந்தது உண்மை என்று நிருபிக்கப்பட்டுவிட்டால் மட்டுமே அமித் மால்வியா பதிவைத் தவறாக கருத முடியும் என குறிப்பிட்டிருந்தார்.
தொடர்புடைய செய்திகள் :
ஹத்ராஸ் கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.