Aran Sei

‘இந்துத்துவவாதிகள் கோழைகள்; சமூக ஊடகங்களில் வெறுப்பைப் பரப்புபவர்கள்’ – ராகுல் காந்தி விமர்சனம்

ந்துத்துவத்தைப் போதிப்பவர்களுக்கு வெளியில் வரத் தைரியம் இல்லை, அவர்கள் கோழைகள் என்றும் இந்தத்துவாவைப் போதிப்பவர்கள் இணைய உலகில் வெறுப்பைப் பரப்புகிறார்கள் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்துத்துவவாதிகளின் வெறுப்பு பேச்சை எதிர்த்து நாம் போராட வேண்டும், நமது நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் ஆதரவாளர்களை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
https://twitter.com/RahulGandhi/status/1484151691318644738
பாஜக ‘இந்துத்துவத்தைப் போதிக்கிறது, இந்துவாக இருப்பதற்கும் ‘இந்துத்துவவாதியாக’ இருப்பதற்கும் வித்தியாசம் இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Source : The Hindu
‘இந்துத்துவவாதிகள் கோழைகள்; சமூக ஊடகங்களில் வெறுப்பைப் பரப்புபவர்கள்’ – ராகுல் காந்தி விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்