Aran Sei

பிணங்கள் ஆற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன; பிரதமர் அவர்களே, கண்ணாடியை கழற்றி விட்டு பாருங்கள் – ராகுல் காந்தி

கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சூழலில் “பிரதமர் மோடி அவர்களே கண்ணாடியை கழற்றி விட்டு நாட்டை பாருங்கள்” என்று, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையிலும், புதிய நாடாளுமன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கான ரூ.13,450 கோடியில் பிரதமர் என்னென்ன செய்திருக்கலாம் – பட்டியலிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “எண்ணற்ற பிணங்கள் ஆற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன, மருத்துவமனையில் நிற்பவர்களின் வரிசை நீண்டுகொண்டே இருக்கின்றது. உயிர் வாழ்தலுக்கான பாதுகாப்பு உரிமை பறிக்கப்படுகிறது. பிரதமர் அவர்களே, கண்களில் அணிந்திருக்கும்  அந்த இளஞ்சிவப்பு கண்ணாடிகளை கழற்றுங்கள். அவற்றால்  சென்ட்ரல் விஸ்டாவைத் (புதிய நாடாளுமன்ற திட்டம்) தவிர வேறு எதையும் உங்களால் பார்க்க இயலாது” என்று பதிவிட்டுள்ளார்.

பிணங்கள் ஆற்றில் மிதந்து கொண்டிருக்கின்றன; பிரதமர் அவர்களே, கண்ணாடியை கழற்றி விட்டு பாருங்கள் – ராகுல் காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்