பெட்ரோல், டீசல் மீதான விலையை உயர்த்தி, சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மத்திய அரசு செய்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 12 நாட்களாக உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர், 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது..
நாட்டிலேயே முதன்முறையாக ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்தது. அதை தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம், அணுப்பூரில் பெட்ரோல் விலை ரூ.100.98 ஆக அதிகரித்தது. டீசல் விலையும் கணிசமான உயர்ந்துவந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், அதன் மீது சுமத்தப்பட்டுள்ள வரியைக் குறைக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி, நாடு முழுதும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழகத்திலும், இன்று (பிப்பிரவரி 22), திமுக சார்பில் விலையுயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இதுகுறித்து, ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “பெட்ரோல் நிலையங்களில் உங்கள் காருக்கு எரிபொருள் நிரப்பும்போது, அங்குள்ள மீட்டர் வேகமாக ஓடுவதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. வீழ்ச்சிதான் அடைந்து வருகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.
पेट्रोल पम्प पर गाड़ी में तेल डालते समय जब आपकी नज़र तेज़ी से बढ़ते मीटर पर पड़े, तब ये ज़रूर याद रखिएगा कि कच्चे तेल का दाम बढ़ा नहीं, बल्कि कम हुआ है।
पेट्रोल 100 रुपय/लीटर है।
आपकी जेब ख़ाली करके ‘मित्रों’ को देने का महान काम मोदी सरकार मुफ़्त में कर रही है!#FuelLootByBJP
— Rahul Gandhi (@RahulGandhi) February 22, 2021
மேலும், “ஆனால், பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.100 ஆக இங்கு அதிகரித்துள்ளது. சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்து, தங்கள் நண்பர்களின் பாக்கெட்டை நிரப்பும் மிகச்சிறந்த பணியை மோடி அரசு செய்து வருகிறது.” என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அந்த ட்வீட்டுடன்,#பியூல்லூட்பைபிஜேபி (#FuelLootByBJP) என்ற ஹேஷ்டேக்கையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.