இந்தியாவில் உள்ள ஆதிவாசிகளும் தலித்களும் படிக்கக் கூடாது என்பதுதான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் நோக்கம் என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டியல் சாதி மாணவர்களுக்குப் பள்ளிப்படிப்பை முடிக்க உதவும், மத்திய அரசின் உதவித்தொகை திட்டம் 14க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ளது என்று எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்திருந்தது.
இந்த உதவித்தொகை திட்டத்தின் மூலம், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 சதவீத உதவித்தொகையும், பட்டியல் சமூகத்தில் தகுதிவாய்ந்த மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 75 சதவீத உதவித்தொகையும் பெறுகிறார்கள்.
ஆனால், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 60 லட்சத்துக்கும் மேற்பட்ட மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மத்திய அரசு சரியாக நிதி ஒதுக்காததால், இந்த உதவித்தொகை திட்டத்தில் 10 சதவீதத்தை மட்டுமே பெறுகிறார்கள் என்று எக்னாமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக 2017-18 கல்வியாண்டில் பல மாநிலங்களில் இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மிகக் குறைந்த அளவிலேயே இந்தத் திட்டத்திற்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதனால், பல பட்டியல் சமூக மாணவர்கள் தங்கள் பள்ளி மேல் படிப்பைப் பாதியிலேயே கைவிடுகின்றனர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
`தலித் மாணவர்களின் கல்லூரிக் கனவைக் குழிதோண்டி புதைத்தது மோடி அரசு’ – மே 17 இயக்கம்
மத்திய நிதி அமைச்சகம், இதற்கான நிதியைச் சில ஆண்டுகளாகப் பெருமளவு குறைத்துள்ளதால், மாநில அரசுகளின் மேல் இந்த நிதிச்சுமை முழுவதும் விழுகிறது என்றும் இதனால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுவதாக மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்றும் எக்னாமிக்ஸ் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பான சர்ச்சை, ஏறக்குறைய ஓராண்டாக அமைச்சரவையில் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. சமீபத்தில் பிரதமர் அலுவலகத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியிடனும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது என்று எக்னாமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
‘ மனு தர்மத்தில் பெண் விரோத, தலித் விரோத கருத்துக்கள் உள்ளன ‘ – ஆர்.எஸ்.எஸ்
இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் நோக்கம், இந்தியாவில் உள்ள ஆதிவாசிகள் மற்றும் தலித்களுக்குக் கல்வி கிடைத்து விடக்கூடாது என்பதுதான்.” என்று விமர்சித்துள்ளார்.
மேலும், “எஸ்சி-எஸ்டி மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்துவதன் மூலம், அவர்களின் திட்டத்தை நியாயப்படுத்துகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
In BJP/RSS vision of India, Adivasis and Dalits should not have access to education.
Stopping scholarships for SC-ST students is their way of ends justifying their means. pic.twitter.com/rnh31gZdmf
— Rahul Gandhi (@RahulGandhi) November 29, 2020
ட்வீட்டுடன், எக்னாமிக்ஸ் டைம்ஸில் வெளிவந்த செய்தியையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.