Aran Sei

‘ஆதிக்க எதிர்ப்பின் அடையாளம்தான் ரோஹித் வெமுலா’ – ராகுல் காந்தி

ரோஹித் வெமுலாவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ரோஹித் வெமுலா எதிர்ப்பின் அடையாளமாகவும் நமக்கு ஹீரோவாகவும் உள்ளார் என்று கூறியுள்ளார்.

இது குறித்து, ரோஹித் வெமுலாவின் நினைவு நாளான இன்று(ஜனவரி 17), தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி, “ரோஹித் வெமுலா தனது தலித் அடையாளத்திற்காக காட்டப்பட்ட பாகுபாட்டாலும் அவமானத்தாலும் கொல்லப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

“ஆண்டுகள் பல கடந்தாலும், ரோஹித் வெமுலா எதிர்ப்பின் அடையாளமாகவும், அவரது துணிச்சல் மிக்க தாய் நம்பிக்கையின் அடையாளமாகவும் இருப்பார்கள். இறுதி வரை போராடியதற்காக, ரோஹித் என் ஹீரோ. அவர் அநீதி இழைக்கப்பட்ட என் சகோதரன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘From Shadows to Stars’ – ரோகித் வெமுலா நினைவு நாள்

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் 26 வயதான தலித் மாணவர் ரோஹித் வெமுலாமீது சாதிரீதியிலான துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில், 2016ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று அவர் தற்கொலை செய்து கொண்டார். ரோஹித் வெமுலாவின் மரணத்தைத் தொடர்ந்து, உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிபாகுபாட்டிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன.

‘ஆதிக்க எதிர்ப்பின் அடையாளம்தான் ரோஹித் வெமுலா’ – ராகுல் காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்