வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமரின் மாஸ்டர் ஸ்ட்ரோக் காரணமாக 45 கோடி பேர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
75 ஆண்டுகளில் இதை செய்த முதல் பிரதமர் மோடிதான் என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, இன்று (ஏப்ரல் 26), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, “புதிய இந்தியாவின் புதிய முழக்கம் – ஒவ்வொரு வீட்டிலும் வேலையின்மை உள்ளது. 75 ஆண்டுகளில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழக்க வழிவகுத்த முதல் பிரதமர் மோடி” என்று தெரிவித்துள்ளார்.
न्यू इंडिया का न्यू नाराः
हर-घर बेरोज़गारी
घर-घर बेरोज़गारी75 सालों में मोदी जी देश के पहले ऐसे प्रधानमंत्री हैं जिनके ‘Masterstrokes’ से 45 करोड़ से ज़्यादा लोग नौकरी पाने की उम्मीद ही छोड़ चुके हैं। pic.twitter.com/rph7Ogt9nU
— Rahul Gandhi (@RahulGandhi) April 26, 2022
கடந்த ஐந்தாண்டுகளில் 2.1 கோடி பேர் வேலை இழந்துள்ளதாகவும், 45 கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறும் செய்தி அறிக்கையையும் அந்த ட்வீட்டில் ராகுல் காந்தி மேற்கோள் காட்டியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.