Aran Sei

என் தந்தையை கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன் – ராகுல் காந்தி

ன் தந்தையை கொன்றவர்களை நான் மன்னித்து விட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று (புதன்கிழமை), காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்த ராகுல் காந்தி, அதன் ஒருபகுதியாக அரசு மகளிர் கல்லூரியில் மாணவர்களுடன் உரையாடினார்.

அப்போது ஒரு மாணவி “உங்கள் தந்தை தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார் (LTTE), அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில்  அளித்த ராகுல் காந்தி “யார் மீதும் எனக்கு கோபமோ, வெறுப்போ இல்லை. ஆமாம், நான் என் தந்தையை இழந்துவிட்டேன், அது எனக்கு ஒரு சோதனைக் காலம்… நான் மிகப்பெரிய வலியை உணர்ந்தேன், ஆனால் எனக்கு கோபம் வரவில்லை.” என்று கூறினார்.

எழுவர் விடுதலை: ‘கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய கோருவது நியாயம் இல்லை; விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சி வென்றதில்லை’ – காங்கிரஸ்

இதைத்தொடர்ந்து, அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் கரவொலியை எழுப்பினர்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி “வன்முறையால் உங்களிடமிருந்து எதையும் எடுத்துவிட முடியாது… என் தந்தை என்னுள் வாழ்கிறார்… என் தந்தை என் மூலமாக பேசுகிறார்” என்று கூறினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்து வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அதற்கு எதிரான நிலைபாட்டில் உள்ளன.

Source: PTI

என் தந்தையை கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன் – ராகுல் காந்தி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்