பாலகோட் தாக்குதல் தொடர்பான தகவலை முன் கூட்டியே பத்திரிகையாளரிடம் தெரிவித்து இந்திய விமான படைக்கு துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
டிர்பி மோசடி வழக்கில், மும்பை காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரதோ தாஸ் குப்தாவுக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற உரையாடல் இணைக்கப்பட்டுள்ளது.
சுமார் 1000 பக்கங்களுக்கு நீண்டுள்ள இந்த உரையாடல், தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிரதோ தாஸ் குப்தாவுக்கும், அர்னாப் கோஸ்வாமிக்கும் இடையில் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. காவல்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த உரையாடல்களின் முக்கிய பகுதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது.
So BJP Govt has been sharing defense secrets too with Arnab Goswami? He knew about Airstrike on Pakistan, after Pulwama, days in advance.
The chat says, "it's good for the big man, he will sweep polls" #ArnabGate pic.twitter.com/BkRG1qMIZn
— Gaurav Pandhi (@GauravPandhi) January 15, 2021
அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழிநுட்ப பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கௌரவ் பந்தி (@GauravPandhi) தனது டிவிட்டர் பக்கத்தில், அர்னாப் கோஸ்வாமிக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் நடந்து உரையாடலின் ஒரு பகுதியை பகிர்ந்துள்ளார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடந்துள்ள அந்த உரையாடலில், அர்னாப் கோஸ்வாமி ஒரு மிகப்பெரிய விஷயம் நடைபெறவுள்ளது என்று கூறுகிறார். அதற்கு தாவுத் இப்ராஹிம் தொடர்பானதா என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், பாகிஸ்தான் தொடர்பானது என்றும், இந்தமுறை மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளதாகவும் பதில் அளிக்கிறார்.
அர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்?
அதற்கு பிரதோ தாஸ், இந்தத் தேர்தல் சமயத்தில் அந்தப் பெரிய மனிதருக்கு (நரேந்திர மோடிக்கு) இது சாதகமாக இருக்கும் என்றும், அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்றும் கூறுகிறார்.
அதன் பிறகு, இது வெறும் தாக்குதலா? அல்லது அதை விடப் பெரியதா? என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், வழக்கமான தாக்குதலை விட பெரியது என்றும் காஷ்மீர் தொடர்பான மிகப்பெரிய விஷயமும் கூட, என்று பதில் அளிக்கிறார். அத்துடன், பாகிஸ்தானைப் பொறுத்தவரை, மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தாக்குதல் அமையும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அர்னாப் கூறுகின்றார்.
அர்னாபுக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் இந்த உரையாடல் நடைபெற்று மூன்று நாள் கழித்து, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள், இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.
டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு
அதற்கு முன்னர் பிப்ரவரி 14ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 46 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறிய இந்தியா, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலகோட் தாக்குதலை நடத்தியதாக கூறியது.
அர்னாப் வாட்ஸ்ஆப் உரையாடல்: ‘நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் விசாரணை தேவை’ – காங்கிரஸ் தீர்மானம்
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இன்று அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ் அப் உரையாடல்கள் குறித்து பேசியுள்ளார். கரூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கலந்துக்கொண்ட அவர், ”பாலகோட்டில் நடந்த வான் வழி தாக்குதல் ஒரு பத்திரிகையாளருக்கு முன் கூட்டியே கூறப்பட்டிருப்பது, சமீபத்தில் வெளியே வந்தது. இந்திய விமானப் படை பாகிஸ்தான் மீது வெடிகுண்டை வீசப் போகிறது என்பதை மூன்று நாட்களுக்கு முன்னரே தெரிந்துக் கொண்ட ஒரு பத்திரிகையாளர், ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது என்று அவரின் நண்பரிடம் கூறுகிறார்.
‘தேசதுரோகி அர்னாப் கோஸ்வாமியை கைது செய்’ – மகாராஷ்ட்ராவில் வலுக்கும் எதிர்ப்பு
இந்த உலகத்திலேயே ஐந்து (இந்திய பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், இந்திய விமானப் படை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசர்) பேருக்கு தான் பாலகோட் தாக்குதல் நடைபெற இருப்பது என்பது முன்கூட்டியே தெரியும். மற்றப்படி உலகத்தில் உள்ள யாருக்கும் பாலகோட் தாக்குதல் நடைபெறுதற்கு முன்பாக அதைப்பற்றி தெரிவதற்கான வாய்ப்பில்லை. இந்த ஐந்து பேரில் ஒருவர் தான் பத்திரிகையாளரிடம் கூறியிருக்க முடியும். அந்த ஒருவர் தான் இந்திய விமான படைக்கு துரோகம் செய்துள்ளார்” என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
40 ராணுவ வீரர்களின் மரணத்தை கொண்டாடும் ’தேசியவாதி’ – அர்னாப்பை கிண்டல் செய்த சசி தரூர்
”இதில் ஒருவர் தான் நமது விமானப் படையைச் சேர்ந்த பைலட்டுகளின் உயிர்களை ஆபத்தில் தள்ளியுள்ளார். இந்தத் தாக்குதல் நடப்பதை முன் கூட்டியே பத்திரிகையாளரிடம் தெரிவித்தது யார் என்பது தொடர்பாக இன்னும் விசாரணை நடைபெறாமல் இருப்பது ஏன்?” என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் விசாரணை குழுவை அமைக்காதது ஏன் என்பதை சிந்தித்து பாருங்கள் என்று கூறிய ராகுல் காந்தி, பிரதமர் வழியாக இந்தத் தகவல் (பாலகோட் தாக்குதல்) அந்தப் பத்திரிகையாளருக்கு சென்றிருப்பதால் தான், இந்த விவகாரத்தில் பிரதமர் விசாரணையை தொடங்க தயங்குவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.