36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து புதிய விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 29) மறுத்துவிட்டது.
டிசம்பர் 14, 2018 அன்று, உச்ச நீதிமன்றம் 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதற்காக இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற டசால்டு நிறுவனம் இந்திய இடைத்தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக பிரான்ஸ் செய்தி ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் இதனால் ரஃபேல் ஒப்பந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி வழக்கறிஞர் எம் எல் சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவை விசாரிக்க மறுத்து விட்டது. மேலும், மனுதாரர் மனுவை திரும்பப்பெறவில்லை என்றால் மனுவை தள்ளுபடி செய்ய நேரிடும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து மனுதாரர் மனுவை திரும்பப்பெற்றுக்கொண்டார். இதையடுத்து, இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Source : NDTV
Kallakurichi Sakthi International School Issue | Who is the teacher? | Advocate Dhamayandhi
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.