Aran Sei

ஆர்.ஏ. புரம் வீடுகள் இடிப்பு: முதியவர் தீக்குளித்து இறந்ததை எதிர்த்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம்

சென்னை ஆர்.ஏ. புரத்தில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து மரணமடைந்த கண்ணைய்யா இறப்புக்கு காரணமான, ராஜீவ் ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேற்குவங்க மாநில சமூக ஆர்வலர் மேதா பட்கர் கலந்துகொண்டு, ஏழை மக்களின் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினார். குறிப்பாக, “மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆர்.ஏ.புரம் கோவிந்தசாமி நகரில், கால்வாய் ஓரம் இருப்பதாக கூறி சுமார் 200-க்கும் அதிகமான வீடுகளை தமிழக பொதுப்பணித்துறை தற்போது இடித்து வருகிறது.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் வீடுகள் இடிப்பு – உள்நாட்டு மக்கள் மீது அரசு நடத்தும் போர் என  நகர்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு கண்டனம்

அப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்தவர்களின் வீடுகளை, ராஜீவ் ராய் என்பவர் தாக்கல் செய்த வழக்கினால், இடிக்கப்படுவதை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணையா என்ற முதியவர் தீக்குளித்து உயிரிழந்தார். தீக்குளித்து உயிரிழந்த கண்ணைய்யாவின் உயிரிழப்புக்குக் காரணமான ராஜீவ் ராய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மேத்தா பட்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ், தீக்குளித்து உயிரிழந்த நபருக்கு வீடு கட்டித்தர வேண்டும். சுமார் 300 சதுர அடியில் 7 லட்சம் மதிப்பில் வீடு கட்டிதர வேண்டும். வீடுகளை இடிக்கும்போது மக்களின் ஒத்துழைப்புடன் மாற்று வீடு கட்டிதர வேண்டும். வீடு இடித்ததன் மூலம் அங்கு இருக்கும் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : Puthiyathalaimurai

Savukku Shankar Arrest ஆக வாய்ப்பே கிடையாது Piyush Manush Interview |

ஆர்.ஏ. புரம் வீடுகள் இடிப்பு: முதியவர் தீக்குளித்து இறந்ததை எதிர்த்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்