பொது சிவில் சட்டத்தை உருவாக்க உயர்மட்டக் குழு விரைவில் அமைக்கப்படும் என்று பாஜகவைச் சேர்ந்த உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
பெஷாவர் காண்ட் மாவீரன் வீர் சந்திர சிங் கர்வாலியின் நினைவாக பவுரி மாவட்டத்தில், நேற்று (ஏப்ரல் 23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவைத் தொடங்கிவைத்து பேசியுள்ள புஷ்கர் சிங் தாமி, “பொது சிவில் சட்டத்தை உருவாக்க உயர்மட்டக் குழு விரைவில் அமைக்கப்படும். உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதும், மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்ற வேண்டும்” என்று கோரியுள்ளார்.
பொது சிவில் சட்டத்தை பெண்களும் ஏன் எதிர்க்க வேண்டும்? – ஆரிஃபா ஜோஹரி
உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதாக கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்திருந்தார்.
“பல்வேறு சமயங்களைப் பின்பற்றுகிற மக்கள், பழங்குடிகள் வாழ்கிற இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த நாட்டில் தங்களுடைய சமய, கலாச்சார நம்பிக்கைகளைப் பாதுகாத்துக்கொள்கிற, பின்பற்றிக்கொள்கிற உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இந்துத்துவ சட்டத்தை அனைவர் மீதும் திணிக்கும் சதி சிறுபான்மை முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் தனி பண்பாடுகளையும் சிதைக்கும் முயற்சியாகும்” என்று அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பெண்களின் திருமண வயது உயர்வுக்கு பொது சிவில் சட்டமே நோக்கம் – திருமாவளவன்
உத்திரகண்ட சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின் கடைசி நாளான பிப்ரவரி14 அன்று பரப்புரையில் ஈடுபட்டிருந்த புஷ்கர் சிங் தாமி, “பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மூத்த குடிமக்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் அறிவுஜீவிகள் கொண்ட குழு அமைக்கப்படும்” என உறுதியளித்திருந்தார்.
Source: PTI
பாஜகவை எதிர்த்திருந்தால் இளையராஜாவின் பின் தமிழ்நாடு திரண்டிருக்கும்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.