பஞ்சாபில் தனது எம்.எல்.ஏ.க்களை கட்சி மாற வைக்க பாஜக முயற்சித்ததற்கான ஆடியோ காட்சி ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி இன்று தெரிவித்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அனைத்தும் பஞ்சாப் காவல்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிற விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
உ.பி: வக்பு வாரியச் சொத்துக்களை அபகரிக்க முயற்சிக்கும் பாஜக – ஒவைசி குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஜக பணம் வழங்கியதற்கான ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது. இந்த ஆதாரத்தை பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநரைச் சந்தித்து சமர்ப்பித்துள்ளோம். மேலும்முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் காங்கிரஸ் அல்ல; பாஜகவை அம்பலப்படுத்துவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சாதா தெரிவித்துள்ளார்.
“கவலைப்பட வேண்டாம், நாங்கள் யாரையும் வீழ்த்த மாட்டோம், எங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன, விரைவில் வெளியிடுவோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் பாஜக மீது ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டை ஆம் ஆத்மி தலைவர்கள் எழுப்பினர். தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் தலா 25 கோடி ரூபாய் வரை தருவதாக கூறி பாஜகவினர் பேரம் பேசுவதாக ஆம் ஆத்மி தலைவர்கள் குற்றம்சாட்டினார். இந்நிலையில் டெல்லி பாணியில் தாமாக முன்வந்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் முயற்சி எடுத்தார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் பாஜக பக்கம் தாவவில்லை என்பதை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர உள்ளதாக ராகவ் சாதா கூறியுள்ளார்..
“மாநில ஆளுநர் ஒரு தலைமை ஆசிரியர் அல்ல, வீட்டிற்கு என்ன கொண்டு வரலாம், என்ன செய்யக்கூடாது என்று ஆணையிட முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு: ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்த உயர்நீதிமன்றம்
“அவர் வழங்கிய சம்மனை வாபஸ் பெறுவது முற்றிலும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது மற்றும் சட்டவிரோதமானது. நம்பிக்கைத் தீர்மானத்திற்கு அழைப்பு விடுக்க அனுமதி இல்லை என்றால்… முதலில் ஆளுநர் ஏன் ஒப்புதல் அளித்தார்” என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சாதா கேள்வி எழுப்பியுள்ளார்.
Who is behind the Communal Violence in Leicester ? Asia Cup | India vs Pakistan | Deva’s Update 27
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.