Aran Sei

பஞ்சாப்: கடவுள் ராமரை விமர்சித்த பேராசிரியர் – பணிநீக்கம் செய்த பல்கலைக்கழகம்

ஃபேஸ்புக்கில் கடவுள் ராமரை விமர்சனம் செய்த பல்கலைக்கழக உதவிப் பேராசிரியரைப் பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

பஞ்சாப்பில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் கவுர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராமரை விமர்சனம் செய்து காணொளி வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த காணொளிக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

இந்நிலையில் உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் கவுரை லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழக  நிர்வாகம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

அழகர் கள்ளழகராக மாறியது எதனால்? – சூர்யா சேவியர்

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் தனிப்பட்ட முறையில் ஷேர் செய்திருந்த காணொளியால் பலரும் புண்பட்டிருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அவரது செயல்பாடுகளுக்கும் பல்கலைகழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் எப்போதும் மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக இருந்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், இங்கு அனைத்து மதங்களையும் சமமாகவும் அன்போடும் மதிக்கிறோம். சர்ச்சையான காணொளியை பதிவிட்ட உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் கவுர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்” என்று பல்கலைக்கழக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு ஆளுநர் நடத்துவதா?: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம்

பல்கலைக்கழக துணைத் தலைவர் அமன் மிட்டலைத் தொடர்பு கொண்டபோது , ​​உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் கவுரை பணிநீக்கம் செய்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக துணைத் தலைவர் அமன் மிட்டலைத் தொடர்பு கொண்டபோது, ​​உதவிப் பேராசிரியர் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறினார்..

இளையராஜா பேச்சை பொருட்படுத்தக்கூடாது | Dravidar Kazhagam K Veeramani

பஞ்சாப்: கடவுள் ராமரை விமர்சித்த பேராசிரியர் – பணிநீக்கம் செய்த பல்கலைக்கழகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்