பஞ்சாப் அரசியல் தொலைக்காட்சியின் (punjab politics tv) செயலி, இணையதளம் மற்றும் சமூக ஊடக கணக்குகளை முடக்குமாறு ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி, சீக்கியர்களுக்கான நீதி என்ற தடைசெய்யப்பட்ட அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும், சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் இணைய ஊடகத்தைப் பயன்படுத்த முயற்சிப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
2019 இல் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பதாக கூறி அதன் உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தில் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பஞ்சாப் அரசியல் தொலைக்காட்சி தனது இணையதள ஊடகங்களைப் பயன்படுத்த முயற்சிப்பதாக உளவுத்துறை அளித்த தகவல்களில் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வகுப்புவாத ஒற்றுமை மற்றும் பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையிலும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததாக கூறி பஞ்சாப் அரசியல் தொலைக்காட்சி தனது இணையதள ஊடகங்களைத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடங்கியுள்ளது.
Source : The Hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.