Aran Sei

விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி முற்றுகை – விவசாய சங்கங்கள் திட்டம்

டிசம்பர் 3 ஆம் தேதி  அன்று பேச்சுவார்த்தைக்கு தில்லி வருமாறு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் விவசாயிகளின் தலைவர்களை மத்திய விவசாயத்துறை அமைச்சர் அழைத்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று விவசாய சீர்திருத்த சட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட மின்சார மசோதா ஆகியவற்றை  எதிர்த்து, நவம்பர் 26 முதல் தில்லியில் காலவரையற்ற முற்றுகைப் போராட்ட்த்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தன.

இன்று ’ஒரே நாடு, ஒரே விவசாயிகள் எதிர்ப்பு’-நாளை ‘தில்லி சலோ’

பஞ்சாபிலிருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது டிராக்டர்களுடன் டெல்லிக்கு வருவார்கள் என்றும், மூன்று சட்டங்களையும் ரத்து செய்வதற்கான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும் வரை, தில்லியிலேயே இருப்பார்கள் என்றும்  அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்கள் நேற்று (நவம்பர் 24) செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்த விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகு, இந்தப்  பேச்சுவார்த்தை தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஸ்ரீ நரேந்திர சிங் தோமர், டிசம்பர் 3 ஆம் தேதி காலை 11 மணிக்குப் புதுதில்லியில் உள்ள விஜியன் பவனில் அடுத்த சுற்றுப் பேச்சு வார்த்தைக்கு விவசாய சங்கங்களை அழைப்பு விடுத்துள்ளார் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 32 விவசாய சங்கங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தை வேளாண் செயலாளர் சுதன்ஷு பாண்டே,  நேற்று (நவம்பர் 24) வாசித்து காட்டியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது .

விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்

“பஞ்சாப் விவசாயிகளின் சங்கங்கள், அரசுடனான பேச்சுவார்த்தைக்கு எதிரானவை அல்ல. ஆனால் அது இணக்கமான சூழ்நிலையில் நடத்தப்பட வேண்டும். விவசாய சங்க தலைவர்களுக்கு எதிராக ஹரியானா அரசு செய்து வரும் அடக்குமுறையை நாங்கள் கண்டிக்கிறோம்.” என்று அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ள தர்ஷன் பால் ‘தி இந்து’விடம் கூறியுள்ளார்.

மேலும், “பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கேற்போமா இல்லையா என்பதை நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தில்லி போராட்டத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்ததான் முடிவு செய்வோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கான சட்டமல்ல, முதலாளிகளுக்கான சட்டம் : ஜெயரஞ்சன் – வீடியோ

“தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தையும் ஜந்தர் மந்தரையும் விவசாய பேரணிகளுக்கு பயன்படுத்த காவல்துறை எங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். மேலும் நாங்கள் நுழைவதைத் தடுக்க டெல்லி எல்லைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் எங்கு தடுத்தாலும், அங்கேயே நாங்கள் உட்கார்ந்து, எங்கள் போராட்டத்தை தொடர்வோம்.” என்று தர்ஷன் பால் உறுதிப்பட கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெவித்துள்ளது.

மேலும், “டிராக்டர்களில் படுக்கை, உணவுக்கான ரேஷன்களை வைத்துள்ளோம். பஞ்சாபிலிருந்து மட்டும் ஒன்றரை லட்சத்தில் இருந்து 2 லட்சம் விவசாயிகளும், ஹரியானா மற்றும் மேற்கு உத்திர பிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளை இதில் எதிர்பார்க்கிறோம்.” என்று கூறியுள்ளார்.

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

”தமிழ்நாட்டில் சாலை மற்றும் ரயில் மறியல்கள், ராஞ்சியில் ராஜ் பவனை நோக்கி பேரணி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் போன்றவைகளைச் செய்ய உள்ளோம். மேலும், தொழிற்சங்கங்களும் சில சில்லறை வியாபாரிகளின் சங்கங்களும் இந்தப் போராட்டத்தை ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளன.” என்று விவசாய சங்க தலைவர்கள், தில்லிக்குச் செல்லும் வழியில் டிராக்டர்களில் இருந்தபடி கூறியதாக ‘தி இந்து’  வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி முற்றுகை – விவசாய சங்கங்கள் திட்டம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்