Aran Sei

’எங்களுக்குள் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி’ – பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயச் சங்கம்

னைத்து விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட வேண்டும் என்று கூறி, பஞ்சாபைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் போராட்டச் சங்கம் (கேஎம்எஸ்சி), விவசாயச் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை மறுத்துள்ளது.

மேலும், அனைத்து விவசாயச் சங்கங்களையும் அழைக்காததன் மூலம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பிளவுபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

“எங்களுக்கு நடக்கப் போகும் விபரீதம் தெரிகிறது ; அதனால்தான் ரத்தம் கொதிக்கிறது” – விவசாயிகள்

விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் சட்டமாக்கப்பட்ட மசோதாக்களை எதிர்த்து ‘தில்லி சலோ’ (தில்லி போவோம்) எனும் பேராட்டத்திற்கு விவசாயச் சங்கங்கள் அழைப்புவிடுக்கப்பட்டு, இப்போது தில்லி எல்லையில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்கள் தில்லிக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக முள்வேலி, மணல் மூட்டைகள் , ட்ரோன்கள், நீர் பீரங்கிகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

“போராடும் விவசாயிகளை காலிஸ்தானி ஆதரவாளர்கள் என்பதா” – அகாலி தள் கண்டனம்

கொரோனா தொற்றுநோய் மற்றும் குளிரைக் காரணம் காட்டி, டிசம்பர் 3-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாயச் சங்கத் தலைவர்களின் பேச்சு வார்த்தையை, இன்றைக்கு (டிசம்பர் 1)  மாற்றி விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று (நவம்பர் 30)  அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் அழைக்கப்பட்ட 32 விவசாயச் சங்கங்களில், விவசாயத் தொழிலாளர்கள் போராட்டச் சங்கமும் (கேஎம்எஸ்சி) ஒன்றாகும்.

“பல விவசாயச் சங்கங்களுக்கு அழைப்பு விடப்படவில்லை. மேலும், பிரதமர் மோடி இந்தக் கூட்டத்தை நடத்தவில்லை. இந்தக் காரணங்களால், கேஎம்எஸ்சி இந்தப் பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை.” என்று கேஎம்எஸ்சி பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாய சட்டங்கள் – பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் : பி சாய்நாத்

“பஞ்சாப்பைச் சேர்ந்த 32 விவசாயச் சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டால், மொத்தம் உள்ள சுமார் 500 விவசாயச் சங்கங்களையும்  பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “அனைத்து விவசாயச் சங்கங்களையும் அழைக்காததன் மூலம், விவசாயச் சங்கங்கள் மத்தியில் பிளவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. நாங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டால், இந்த விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், பஞ்சாபில் மட்டுமே நடைபெறுகிறது என்று கருதப்படும். இது மத்திய அரசின் சதித்திட்டமாக இருக்கலாம். ” என்று குறிப்பிட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

`இளைஞர்களே, கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளுடன் பேசுங்கள்’ – பிரதமர் மோடி உரை

இந்த விவசாயச் சட்டங்கள், விவசாயிகளின் நலனுக்காகவே உள்ளன என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கைக்குப் பதிலளித்த சர்வன் சிங் பாந்தர், “அவர் (பிரதமர்) ஏற்கனவே தனது முடிவை, அரசின் இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன் அறிவித்துவிட்டார். இப்போது ​எந்த அமைச்சரும் பிரதமருக்கு எதிராக முடிவு எடுக்க முடியாது.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

தில்லியின் எல்லையில் ஆறாவது நாளாக, விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

’எங்களுக்குள் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி’ – பேச்சுவார்த்தையைப் புறக்கணித்த விவசாயச் சங்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்