Aran Sei

பாஜக பேச்சைக் கேட்டு செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் – போராட்டம் நடத்தப்போவதாக பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை

சுமார் 36,000 ஒப்பந்த ஊழியர்களை முறைப்படுத்துவது தொடர்பான கோப்புகளை, அரசியல் காரணங்களுக்காக பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கையெழுத்திடவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளார்.

நேற்று(ஜனவரி 1), தான் பதவியேற்று 100 நாள் ஆனதை ஒட்டி, ஆட்சியின் செயற்பாடுகள் குறித்து அறிக்கையை வெளியிட்டு பேசியுள்ள சரண்ஜித் சிங் சன்னி, “கோப்பில் கையெழுத்திட கோரி நானும் எனது அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தோம். ஆனால், ஆளுநர் பாஜகவின் அழுத்தத்தால் கையெழுத்திடவில்லை” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹரித்வாரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு – யதி நரசிங்கானந்த் சரஸ்வதி மீது வழக்குப் பதிவு

மேலும், “இது அப்பட்டமான அரசியல். தேவைப்பட்டால் எனது அமைச்சர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றினார்.

Source: New Indian Express

பாஜக பேச்சைக் கேட்டு செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் – போராட்டம் நடத்தப்போவதாக பஞ்சாப் முதல்வர் எச்சரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்