பஞ்சாப் மாநிலத்தில் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி உட்பட சாதி குறியீட்டுடன் இயங்கிக்கொண்டிருந்த 56 அரசுப் பள்ளிகளுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை பெயர் மாற்றம் செய்திருக்கிறது.
ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் பஞ்சாப்பில், டிசம்பர் 1-ம் தேதியன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், சாதி அடிப்படையில் பெயர் வைக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு பெயர் மாற்றம் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு டிசம்பர் 26 அன்று வெளியானது.
அதன்படி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் தொடக்கக் கல்வித் துறையின் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதிகளில் இயங்கிக்கொண்டிருக்கும் சாதி குறியீடு கொண்ட அரசுப் பள்ளிகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டது. அதன் அடிப்படையில், தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி உட்பட சாதி குறியீட்டுடன் இயங்கிக்கொண்டிருந்த 56 அரசுப் பள்ளிகளுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை பெயர் மாற்றம் செய்திருக்கிறது.
பஞ்சாப் அரசின் இத்தகைய நடவடிக்கையை, “கல்வி முறையின் புதிய சகாப்தம் உதயமானது” என மாநில ஆம் ஆத்மி பாராட்டியது. முன்னதாக இந்த நடவடிக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், “இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பெயர்கள் மாணவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக சில சமயங்களில் பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதைத் தவிர்க்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.
Source : the print
Savukku Annamalai, Pandey , Maridhas joint conspiracy against DMK alliance | Sangathamizhan VCK
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.