வரலாற்றுச் சிறப்புமிக்க பீமா கோரேகான் போரின் 204 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து புனே மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிசம்பர் 30 ஆம் தேதி நள்ளிரவு முதல் ஜனவரி 2 ஆம் தேதி அதிகாலை 6 மணி வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று புனே மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144 இன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹரித்வார் வெறுப்பு பேச்சு வழக்கு – விசாரணையில் பலரின் பெயர்கள் சேர்க்கப்படுமென காவல்துறை அறிவிப்பு
1818 ஆண்டு ஜனவரி 1 அன்று பீமா கோரேகான் என்ற இடத்தில் பேஷ்வாக்களை எதிர்த்து ஆங்கிலேயப் படைகள் போரிட்டன. இந்தப் போரில் பேஷ்வாக்களின் “சாதிவெறியில்” இருந்து “விடுதலைக்கான போரை” நடத்தி கொண்டிருந்த மஹர் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பட்டியல் மக்களைப் படைவீரர்களாக ஆங்கிலேயப் படைகள் கொண்டிருந்தது.
இந்தப் போரில் பேஷ்வாக்களுக்கு எதிராக வீரத்துடன் போரிட்ட மஹர் சமூக போர்வீரர்களின் நினைவாக பெர்னே என்ற கிராமத்தில் ஜெயஸ்தம்பம் என்ற வெற்றித் தூண் ஆங்கிலேயர்களால் எழுப்பப்பட்டது. இந்த வெற்றித்தூணைக் காண ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி பட்டியல் மக்கள், முக்கியமாக மஹர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த கிராமத்திற்கு வருகை தருவர்.
பீமா கோரேகான் போர் சம்பந்தமாக சமூக வலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்புவது மற்றும் சமூகத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை வெளியிடுவதற்கு புனே மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இந்த போர் சம்பந்தமாக பொது இடங்களில் ஃப்ளெக்ஸ், பேனர்கள் வைப்பதற்கும் புனே மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
Source : The Wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.