Aran Sei

புதுக்கோட்டை: “சாதிய தீண்டாமை கடைபிடிப்பவர்களுக்கு கடும் தண்டனை” – மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் ஆதி திராவிடர் குடியிருப்பில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கவயல் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, “இங்குள்ள அய்யனார் கோயிலில் எங்களை பல தலைமுறைகளாக உள்ளே சென்று சாமிகும்பிட விடுவதில்லை.

தஞ்சாவூர்: இரட்டை குவளை முறை, முடி திருத்தம் செய்யக் கூடாது, மளிகை பொருள் வழங்க கூடாதென பட்டியலின மக்களிடம் தீண்டாமையை கடைப்பிடிக்கும் ஆதிக்க சாதியினர்

இங்கு இரட்டை குவளை முறை கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுச் சாதியினரால் சாதியத் தீண்டாமை தொடர்ந்து இருந்து வருகிறது“ என புகார்களை அடுக்கினர். உடனே, சம்மந்தப்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குக் கூட்டிச் சென்று சாமி கும்பிட வைத்தார்.

அப்போது, மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கோயில் பூசாரி ராஜன் மனைவி சிங்கம்மாள் சாமி ஆடியபடி, சம்மந்தப்பட்ட மக்களை, `நீங்க எல்லாம் உள்ள வரக்கூடாதுன்னு’ பட்டியல் சமூகத்தினரை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். தன் கண்முன்பே நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர், சிங்கம்மாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதேபோல், இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட தேநீர்க்கடையில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. தேநீர்க்கடை உரிமையாளர் மூக்கையா, சாமியாடிய சிங்கம்மாள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கு சாதியத் தீண்டாமை நடந்தாலும், உடனடியாக தீண்டாமையை கடைபிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.

தலித் வீட்டில் சாப்பிட்டால் தீண்டாமை ஒழிந்து விடுமா?, தலித் மக்களும் மனிதர்கள் தான். அவர்கள் வீட்டில் சாப்பிடுவது பெருமையா? – பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் கேள்வி

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி, மத, இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கோயில்களில் சாதிய ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டாலோ, தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டாலோ, முடித்திருத்தங்களில் சாதிய வேறுபாடு காணப்பட்டாலோ, சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்நிலையில் மேற்கண்ட குற்றங்கள் எந்த வடிவிலிருந்தாலும் பின்வரும் கைபேசி எண்ணிற்கு 9443314417 வாட்ஸ் அப் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் சனாதனம் | அக்ரஹாரத்தை அலற விடும் திருமா | Aransei Roast | VCK | Thiruma

புதுக்கோட்டை: “சாதிய தீண்டாமை கடைபிடிப்பவர்களுக்கு கடும் தண்டனை” – மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு எச்சரிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்