Aran Sei

புதுக்கோட்டை: மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேங்கைவயல் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது.இதுகுறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழு விசாரணை செய்தது. இதில் முன்னேற்றம் ஏற்படாததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் வேங்கைவயலில் ரூ.7 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை தீண்டாமை வன்கொடுமை சம்பவம்: தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புதிய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின் உறுதி

இந்நிலையில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அங்கு ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கையை வலியுறுத்தி சத்தியமங்கலம் பகுதியில் ஊர்வலமாகச் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் தடுத்ததைக் கண்டித்தும், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் அந்த இடத்திலேயே ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தினால் புதுக்கோட்டை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விமான கதவில் விளையாட்டா? | வசமாக சிக்கியஆட்டுக்குட்டி | Aransei Roast | Annamalaibjp | tejasvi surya

புதுக்கோட்டை: மலம் கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்