Aran Sei

புதுச்சேரி: மின்துறையை தனியார் மயமாக்கும் பாஜக கூட்டணி அரசு – டெல்லியில் போராட்டம் நடத்த காங்கிரஸ், திமுக, விசிக முடிவு

புதுச்சேரியை ஆளும் பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியார்மயமாக்க திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து வரும் 30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் டெல்லியில் நடத்தப்படும் என்று காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்துள்ளன.

புதுவை மின்துறையை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் இணைந்துள்ளனர். தனியார்மயம் குறித்து காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

போதைப்பொருள் வழக்கில் கைதான பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நிரபராதி: போதைப்பொருள் தடுப்பு பிரிவு தகவல்

கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், திமுக அமைப்பாளர் சிவா, அவைத்தலைவர் எஸ்பி.சிவக்குமார், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், சேதுசெல்வம், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முருகன், பிரதேச செயலாளர் ராஜாங்கம், பெருமாள், ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன், மதிமுக மாநில தலைவர் கபிரியேல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஹிஜாப் அணியக் கோரும் இஸ்லாமிய மாணவிகள் கல்வியிலிருந்து விலக்கப்பட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ பசங்கவுடா யத்னால் கருத்து

கூட்டத்தில், புதுவை மின்துறை லாபத்தில் இயங்கும் நிலையில், தனியார்மயமாக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மின்துறை தனியார்மயத்தைக் கண்டித்து வரும் 30 ஆம் தேதி முதல் மனிதசங்கிலி, தெருமுனை பிரசாரம், பேரணி நடத்துவது என்றும், தமிழகம், புதுச்சேரியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Source: TheHindu

MK Stalin பெயரை கேட்டு திக்கி திணறிய L Murugan | Sundharavalli Interview

புதுச்சேரி: மின்துறையை தனியார் மயமாக்கும் பாஜக கூட்டணி அரசு – டெல்லியில் போராட்டம் நடத்த காங்கிரஸ், திமுக, விசிக முடிவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்