Aran Sei

புதுச்சேரியில் தொடர்ந்து பதவி விலகும் சட்டமன்ற உறுப்பினர்கள்: ஆட்சியை தக்க வைக்குமா காங்கிரஸ்?

புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்வதால், காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி காங்கிரஸ் அமைச்சரவையில் பொதுப்பணி அமைச்சராக இருந்த நமச்சிவாயம், ஊசுடு தொகுதி (தனி) சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.கவில் இணைந்தனர். நேற்றைய தினம், ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுகாதாரத்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் மற்றொரு நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினரான ஜான்குமாரும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் சிவகொழுந்தை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். அவர் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

’திமுகவுக்கு காங்கிரஸ் செலவல்ல வரவு; தொகுதி பங்கீட்டில் திமுக எங்களுக்கு அநீதி இழைக்காது’ – வீரப்ப மொய்லி

இதனால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள காங்கிரஸ் கூட்டணி சபாநாயகரை சேர்த்து 14 உறுப்பினர்களையும், எதிர்கட்சியான என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி 14 உறுப்பினர்களையும் பெற்று சமபலத்தில் உள்ளது.

மருத்துவ இடஒதுக்கீடு: ’தமிழக மாணவர்கள் மீதான வெறுப்பை பாஜக கைவிட வேண்டும்’ – ஸ்டாலின்

காங்கிரசைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே  புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, ”மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதற்காகத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆட்சி முடியும் தருவாயிலும், இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிற சூழ்நிலையிலும் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. எனவே ஒட்டுமொத்தமாக அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளோம்”  என்று நியூஸ்7 யிடம் தெவித்துள்ளார்.

புதுச்சேரி : நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 % இடஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து, புதுச்சேரி காங்கிரஸ் அரசு தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் எனவும் பெரும்பான்மை இழந்துள்ள அரசைச் சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க செய்யவேண்டும் எனவும் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.

’10 நாட்களில் கொரோனா தடுப்பூசி புதுச்சேரி வரும்’ – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

இன்று புதுச்சேரி சட்டபேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சி தலைவரும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமி, ”காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிவிலகியுள்ளனர். இந்த அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே தார்மீக பொறுபோற்று முதல்வர் பதவு விலக வேண்டும் ”எனக் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடத்தும் பாஜக – கிரண் பேடியை திரும்பப் பெறுக : நாராயணசாமி எச்சரிக்கை

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரியின் முதலமைச்சர் நாராயணசாமி, “புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம். இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இவ்வளவு குழப்பங்களுக்கிடையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை புதுச்சேரி வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் தொடர்ந்து பதவி விலகும் சட்டமன்ற உறுப்பினர்கள்: ஆட்சியை தக்க வைக்குமா காங்கிரஸ்?

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்