Aran Sei

ஆளுநரின் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்றால் செலவு மிச்சம் – அண்ணாமலை: பில் வரட்டும் பார்ப்போம் – பழனிவேல் தியாகராஜன் பதிலடி

ளுநரின் தேனீர் விருந்தை புறக்கணித்த திமுக குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்திற்கு, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ்ஸும் பதில் கொடுத்துள்ளார்.

தமிழ் புத்தாண்டை அடுத்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இவ்விருந்தை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. பாஜக மற்றும் அதிமுக மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொண்டன.

இப்புறக்கணிப்பு குறித்து பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது. ஆளுநர் என்பவர் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதி. ஆளுநர் விருந்துக்கு அழைப்பது என்பது காலம் காலமாக உள்ள மரபு” என்று தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?

அண்ணாமலையின் கருத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஆளூர் ஷாநாவஸ்,  “பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்குச் சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ் நாட்டின் உரிமைப் பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது” என்று விமர்சித்திருந்தார்.

நீட் தேர்வு விலக்கு மசோதா: ’ஒப்புதலுக்கு அனுப்பாத தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும்’ – டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

அதே போல, தமிழ்நாட்டு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது அரபி குத்து இல்ல சங்கி குத்து — பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனம்

ஆளுநரின் தேநீர் விருந்துக்கு வரவில்லை என்றால் செலவு மிச்சம் – அண்ணாமலை: பில் வரட்டும் பார்ப்போம் – பழனிவேல் தியாகராஜன் பதிலடி

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்