Aran Sei

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்ப பெரும் வரை நாகாலாந்தில் போராட்டங்கள் தொடரும் – நாகா மக்கள் முன்னணி அறிவிப்பு

நாகாலாந்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப் படுவதாக நேற்று (டிசம்பர் 30) ஒன்றிய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவோம் என்று நாகாலாந்தில் உள்ள நாகா மக்கள் முன்னணி மற்றும் நாகா மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இந்த சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய டிசம்பர் 26 அன்று ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்த நிலையில், நாகாலாந்தில் நேற்று (டிசம்பர் 30) மேலும் 6 மாதங்களுக்கு இச்சட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. இந்த நீட்டிப்பு என்பது மிகவும் அதிர்ச்சியாகவும், அவமானமாகவும் இருப்பதாக நாகா மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
“நாகாலாந்து சட்டமன்றம் டிசம்பர் 20 அன்று ஒரு நாள் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் படி ஒன்றிய அரசின் முடிவை நாகாலாந்து அரசு நிராகரிக்க வேண்டும்” என்று நாகா மக்கள் முன்னணி கூறியுள்ளது.
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை நீட்டித்தது மற்றும் நாகாலாந்தை “பதற்றம் நிறைந்த பகுதியாக” அறிவித்ததைத் திரும்ப பெரும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்று நாகா மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
Source : The Wire
ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்ப பெரும் வரை நாகாலாந்தில் போராட்டங்கள் தொடரும் – நாகா மக்கள் முன்னணி அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்