மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து, வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தின் 80-ம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்ட் 9-ஐ முன்னிட்டு ஆகஸ்ட் 10 நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர், மின்துறை அமைச்சர், தொழிலாளர்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஒன்றிய அரசு, மின்சார சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பாதிப்புகள் தாங்கள் அறிந்ததே! ஒன்றிய அரசின் இந்த மின்சார சட்ட திருத்த மசோதா 2022 தாக்கல் செய்வதை அறிந்த தேசிய மின்சார தொழிலாளர் பொறியாளர் கூட்டமைப்பு சார்பாக, டெல்லியில் கடந்த 02.08.2022 அன்று கூடி விவாதித்தது.
தெற்காசிய கடலை ராணுவமயமாகும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது – மே 17 இயக்கம் அறிக்கை
அதனடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. மின்சார சட்ட திருத்த மசோதா 2022ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை கண்டித்து, வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தின் 80-ம் ஆண்டு நினைவு நாளான ஆகஸ்ட் 9-ஐ முன்னிட்டு ஆகஸ்ட் 10 நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் நாளில் நாடு முழுவதும் பணி முடக்கம் செய்வது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தாக்கல் செய்யப்படும் நாளில் தமிழக மின் வாரிய பணியாளர்கள், உடனடியாக பணி நிறுத்தம் செய்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவிகள் பலியாடா? | முதலமைச்சர் Stalin கவனிக்க வேண்டும் | Karikalan | Kallakurichi Sakthi School
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.