Aran Sei

இலங்கை கடற்படையின் படகு மோதி தமிழக மீனவர்கள் பலி – உடலை ஒப்படைக்கக்கோரி மறியல்

லங்கை கடற்படையின் ரோந்து படகு மோதி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடலை ஒப்படைக்கக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

“இலங்கை கடற்படை இனி கைது செய்யப்போவதில்லை, மூழ்கடித்து கொலை செய்யப்போகிறது” – வைகோ காட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து, ஜனவரி 18 ஆம் தேதி காலை, 214 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர். இவர்களில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த மெசியா, உச்சிபுளியைச் சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார் மண்டபத்தைச் சேர்ந்த சாம் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் – இலங்கை கடற்படை அட்டூழியம்

கோட்டைபட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களில், 213 விசைப்படகுகள் கரை திரும்பின. ஆனால் ஆரோக்கியசேசுவிற்கு சொந்தமான விசைப்படகில் சென்ற நான்கு பேரும் கரை திரும்பவில்லை .

இதுகுறித்து சக மீனவர்கள் மேற்கொண்ட விசாரணையில், ஆரோக்கிய சேசுவின் விசைப்படகை இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் படகு கடலுக்குள் மூழ்கி 4 பேரும் இறந்துவிட்டதாக தெரிய வந்ததுள்ளது. இதனிடையே, காணாமல் போன நான்கு மீனவர்களில், மெசியா, செந்தில்குமார் ஆகிய இரண்டு பேரின் உடல்கள் நேற்று (ஜனவரி 20) மீட்கப்பட்டன.

`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்

இதைத்தொடர்ந்து, இன்று (ஜனவரி 21) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில், விசைப்படகு மீனவர்கள் 1000 பேர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 4 மீனவர்களின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இலங்கை கடற்படையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்

இதை தொடர்ந்து, அங்கு வந்த அறந்தாங்கி உதவி ஆட்சியர் ஆனந்த்மோகன், மீன்வளத்துறை அதிகாரி குமரேசன், மீனவர்களின் உடலை 24 மணி நேரத்தில் தமிழகம் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து, மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

இலங்கை கடற்படையின் படகு மோதி தமிழக மீனவர்கள் பலி – உடலை ஒப்படைக்கக்கோரி மறியல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்