Aran Sei

பஞ்சாப்புக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

பிரதமர் மோடியின் பஞ்சாப் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) தெரிவித்துள்ளது.

லக்கிம்பூர் கலவரத்திற்கு காரணமானவர் என கைதான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவிற்கு அலகாபாத் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்போவதாக எஸ்கேஎம் குறிப்பிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதிக்கு பிப்ரவரி 14 ஆம் தேதியும், பிப்ரவரி 16 ஆம் தேதி பதன்கோட் பகுதிக்கும், பிப்ரவரி 18 ஆம் தேதி அபோஹர் பகுதிக்கும் பிரதமர் மோடி வருகை தரும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுள்ளது.

பிப்ரவரி 20 ஆம் தேதி, பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள், அந்த மாநிலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி நவம்பர் 19 ஆம் தேதி திரும்பப் பெற்றார். இதனைத் தொடர்ந்து பெரோஸ்பூரில் பிரதமர் மோடி கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் பிரச்சாரத்திற்காக பஞ்சாப் மாநிலத்திற்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரின் வருகையின்போது கருப்பு கொடி காட்டப்படும்போது எஸ்கேஎம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சுவரொட்டி ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

Source: The Wire

பஞ்சாப்புக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் – விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்