Aran Sei

குஜராத்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் இறங்கும் தலித் மக்கள்

குஜராத் மாநில வட்காம் சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள தலித் குடும்பங்கள் மே 1-ம் தேதி இரவு 15 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

குஜராத் மாநிலம் பலன்பூரில் இருந்து, அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையினரால் ஏப்ரல் 20 அன்று கைது செய்யப்பட்டார்.

‘கோட்ஸேவை பிரதமர் மோடி கடவுளாக பார்க்கிறார்’ எனும் ஜிக்னேஷ் மேவானியின் ட்வீட்டினால் அவரை கைது செய்துள்ளோம்: அசாம் காவல்துறை தகவல்

“நாதுராம் கோட்சேவை பிரதமர் நரேந்திர மோடி கடவுளாகப் பார்க்கிறார். வடகிழக்கு மாநிலங்களில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று ஜிக்னேஷ் மேவானி ட்வீட் செய்தற்காக அவரை கைது செய்துள்ளதாக அசாம் காவல்துறை தெரிவித்திருந்தது.

குஜராத்தில் உள்ள ஏறக்குறைய 1,000 கிராமங்களில் உள்ள தலித் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஒன்று கூடி ஜிக்னேஷ் மேவானியை விடுதலையை உறுதி செய்யக் கோரும் கடிதத்தில் கையெழுத்திட்டு குஜராத் முதலமைச்சருக்கு அனுப்பவுள்ளதாக தலித் செயற்பாட்டாளர் மார்ட்டின் மக்வான் தெரிவித்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானியை கைது செய்திருப்பது ஜனநாயக விரோதம் – ராகுல் காந்தி கருத்து

“மராத்வாடா பல்கலைக்கழகத்தின் பெயரை அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்று மாற்றக் கோரி நடந்த போராட்டத்தில் 2,000 பேர் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. பீமா கோரேகான் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. அதே போல் ஜிக்னேஷ் மேவானியின் வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று குஜராத் முதலமைச்சருக்கு அனுப்பவுள்ள கடிதத்தில் மார்ட்டின் மக்வான் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக அசாம் பாஜக தலைவர் புகார் கொடுத்தது பாஜக தலைமைக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆகவே ஜிக்னேஷ் மேவாணி கைது செய்யப்பட்டதையும், குறிப்பாக அசாம் காவல்துறையினர் குஜராத்திற்கு வந்து அவரை செய்ததும் “தலித் அடையாளத்திற்கு அவமானம்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

பெண் காவலரை தாக்கியதாகப் புகார் – ஜிக்னேஷ் மேவானியை மீண்டும் கைது செய்த காவல்துறை

மேலும் அக்கடிதத்தில், ஜிக்னேஷ் மேவானியை தரக்குறைவாக நடத்தப்பட்டதற்குக் காரணமானவர்களை விசாரிக்க வேண்டும். ஜிக்னேஷ் மேவானியிடம் அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : counterview

தமிழக அரசு Maridhas ஐ கூப்பிட்டு விசாரிக்கணும்

குஜராத்: ஜிக்னேஷ் மேவானியை விடுதலை செய்ய கோரி போராட்டத்தில் இறங்கும் தலித் மக்கள்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்