Aran Sei

இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மீது உபா சட்டம் – வழக்கை திரும்பப் பெற அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

பா (சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்) சட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்றும், மாநில உரிமையைப் பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை (என்ஐஏ) கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பல்வேறு முற்போக்கு இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ் ஆகிய மூவரும் ஊபா (சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம்) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து, சித்தானந்தன் என்பவரும் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.

ஊபா – மிசா, தடா, பொடாவுக்கு நிகரானது, மக்களாட்சிக்கு எதிரானது – வைகோ

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 22), சேலம் நாட்டாண்மை கழகக் கட்டிடம் முன்பு, இந்த கைதுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நன்றி : peoplesfront.inஇதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த கோவை சையது ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றியுள்ளனர்.

அரசியல் பழிவாங்கலுக்காகவே உபா சட்டம் பயன்படுகிறது  – எம்.எச்.ஜவாஹிருல்லா  குற்றச்சாட்டு

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக்கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, அருந்ததியர் மக்கள் இயக்கம் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றியுள்ளனர்.

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ், சித்தானந்தன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A மற்றும் உபா (UAPA) சட்ட பிரிவுகளை திரும்பப் பெற வேண்டும் என்றும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அகில் கோகோய் – பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மேலும், “கருப்புச் சட்டமான ஊபாவை (சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம்) நிரந்தரமாக நீக்க வேண்டும். மாநில உரிமையைப் பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை (என்ஐஏ) கலைக்க வேண்டும்.” என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுத்தப்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கேரளாவின் அகழி பகுதியில், தமிழகத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர், கேரளா காவல்துறையின், தண்டர்போல்ட் என்ற அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர் என்று கேரள காவல்துறையினரால் குற்றம் சாட்டப்படும் மணிவாசகத்தின் இறுதிச் சடங்கு சேலத்தில் நடைபெற்றது.

இந்த இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள், அரசுக்கு எதிராக முழக்கமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில், உபா சட்டத்தின் கீழ், பாலன், கோ.சீனிவாசன், அனுப்பூர் செல்வராஜ், சித்தானந்தன், சுரேஷ் ஆகியார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறுதிச் சடங்கில் கலந்துகொண்டவர்கள் மீது உபா சட்டம் – வழக்கை திரும்பப் பெற அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்