Aran Sei

நபிகள் விவகாரம்: அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என இந்தியாவை அறிவுறுத்திய சீனா

பிகள் நாயகம் மீது பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த அவதூறு கருத்து சர்வதேச பிரச்சனையாகியுள்ள நிலையில், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் வென்பிங் அறிவுறுத்தி உள்ளார்.

முன்னதாக, முகமது நபி குறித்து பாஜகவின் (முன்னாள்) தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறான கருத்து தெரிவித்திருந்தார். இதற்குப் பல பல வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் பிறகு அவர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக பாஜக கட்சி மேலிடம் தெரிவித்தது.

உ.பி: சட்டவிரோதமாக வீடுகள் இடிக்கப்படுவதை தடுக்க ஜாமியத் உலமா-ஐ-ஹிந்த் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

மேலும், பாஜகவின் டெல்லி மாநில ஊடக பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டால், நபிகள் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து, பின்னர் நீக்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

உலக நாடுகளின் கண்டனங்களைத் தொடர்ந்து, அனைத்து மதங்களையும் மதிப்பதாகவும், எந்த ஒரு மதத்தையோ ஆளுமைகளையோ அவமதிப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பாஜக அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி: மேற்குவங்க சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

இந்த நிலையில் சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பிங் தெரிவித்து இருப்பதாவது, “வெவ்வேறு நாகரிகங்களையும் வெவ்வேறு மதங்களையும் கொண்டவர்கள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். சமத்துவமாக இணைந்து வாழ வேண்டும் என்று சீனா விரும்புகிறது. இந்த விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்.” என்று கூறியுள்ளார்.

Source: Thenewindianexpress

Public Opinion I Seeman Comment on Free Bus Travel for Women I Aransei

நபிகள் விவகாரம்: அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என இந்தியாவை அறிவுறுத்திய சீனா

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்