Aran Sei

‘மனதளவில் ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன்’ என ஃபேஸ்புக்கில் விமர்சித்த பேராசிரியர்: பணி நீக்கம் செய்த பல்கலைக்கழகம்

னதளவில் ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன்’ என்று ஃபேஸ்புக்கில் விமர்சித்த உதவிப் பேராசிரியரைப் பல்கலைக்கழக நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

பஞ்சாப்பில் உள்ள லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் கவுர். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராமரை விமர்சனம் செய்து காணொளி வெளியிட்டதாக சொல்லப்படுகிறது. அந்த காணொளிக்கு எதிர்ப்புக் கிளம்பியது.

ராமரின் பெயரில் வகுப்புவாத வன்முறை: தேர்தல் வெற்றிக்காக மதப் பிளவை பாஜக விதைப்பதாக சஞ்சய் ராவத் விமர்சனம்

அந்த காணொளியில், “மனதளவில் ராவணன் நல்லவன். ஆனால், ராமன் நல்லவனில்லை. ராமனை ஒரு தந்திரக்காரனாக நான் பார்க்கிறேன். ராமன், சீதையை ராணுவனனிடம் சிக்கவைக்கத் திட்டம் தீட்டி, இறுதியில் சீதையைச் சிக்கவைத்துவிட்டு எல்லாப் பழியையும் ராவணன் மீது போட்டுவிட்டான். இதில் யார் நல்லவன், யார் கெட்டவன் என்று நாம் எப்படி முடிவு செய்ய முடியும். இன்று உலகமே ராமனை வணங்கிவிட்டு, ராவணனைக் கெட்டவன் என்கிறது. ஆனால், ஒரு செயலை திட்டமிட்டுச் செய்த ராமன் எப்படி நல்லவனாக இருக்க முடியும். ராமன் தந்திரமானவன்” எனப் பேராசிரியை குர்சங் ப்ரீத் கௌர் அதில் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், “எங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ஒருவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்திருந்த காணொளியால் பலரும் புண்பட்டிருப்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் அவரது செயல்பாடுகளுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் எப்போதும் மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக இருந்து வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

‘ராமர் கடவுள் இல்லை; ஒரு கதாபாத்திரம் மட்டுமே’ – பாஜக கூட்டணி கட்சி தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி கருத்து

மேலும், இங்கு அனைத்து மதங்களையும் சமமாகவும் அன்போடும் மதிக்கிறோம். சர்ச்சையான காணொளியை பதிவிட்ட உதவிப் பேராசிரியர் குர்சங் பீரித் கவுர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்காக நாங்கள் வருத்தம் தெரிவித்து கொள்கிறோம்” என்று பல்கலைக்கழக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : indian express

Governor RN Ravi க்கு எதிராக கர்ஜித்த Tamilnadu Assembly

‘மனதளவில் ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன்’ என ஃபேஸ்புக்கில் விமர்சித்த பேராசிரியர்: பணி நீக்கம் செய்த பல்கலைக்கழகம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்