Aran Sei

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பேராசிரியர் சாய்பாபா விடுதலை – மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

Credit: The Wire

ட்டு ஆண்டுகள் சிறையிலிருந்த பின்னர், முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு இன்று (அக்டோபர் 14) விடுதலை செய்துள்ளது.

2017ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரோஹித் தியோ மற்றும் அனில் பன்சாரே ஆகியோர் அடங்கிய விசாரணை நீதிமன்ற அமர்வு, மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட மகேஷ் திர்கி, பாண்டு போரா நரோட், ஹேம் கேசவதத்தா மிஸ்ரா, பிரசாந்த் ராஹி, விஜய் நன் திர்கி மற்றும் ஜி.என்.சாய்பாபா ஆகியோரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

‘இந்தியா ஒரு விபத்தை நோக்கி செல்கிறது’ – சிறையிலுள்ள பேரா.சாய்பாபாவின் புத்தக வெளியீட்டில் அருந்ததி ராய் கருத்து

மார்ச் 7, 2017 அன்று, கட்சிரோலியில் உள்ள விசாரணை நீதிமன்றம் பேராசிரியர் சாய்பாபாவுக்கு சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சாய்பாபா உள்பட தண்டிக்கப்பட்ட மற்றவர்களும் இணைந்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் நிலுவையிலிருந்தது. தண்டிக்கப்பட்ட ஐந்து குற்றவாளிகளில் ஒருவர் மேல்முறையீடு மனு விசாரிக்கப்படும் முன்பே உயிரிழந்தார்.

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக சிறையிலடைக்கப்பட்ட பேராசிரியர் சாய்பாபா: பணிநீக்கம் செய்த கல்லூரி

இன்று இந்த மனுவை நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 5 போரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. வேறு எந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்படாவிட்டால், இவர்களை உடனடியாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

பேராசிரியர் சாய்பாபா போலியோவால் பாதிக்கப்பட்டவர். 90% உடல் செயல்திறனை இழந்தவர். கணைய அழற்சி, உயர் ரத்த அழுத்தம், இதயத் தசை நோய் மற்றும் நாள்பட்ட முதுகுவலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் என்பது கவனிக்கத்தக்கது.

Source :the hindu

என்னய வச்சி காமெடி ஒன்னும் பன்னலயே | Getoutனு சொல்லிட்டு தப்பி ஓடிய H. Raja | Aransei Roast | BJP

மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த பேராசிரியர் சாய்பாபா விடுதலை – மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்