Aran Sei

‘தேசபக்தர்களுக்கும் தேசவிரோதிகளுக்கும் வித்தியாசம் தெரியாத மோடி’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியால் தேசபக்தர்களையும் தேச விரோதிகளையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்ரவரி 15) உத்தரபிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டம், சந்த்பூரில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த விவசாயிகளின் மகாபஞ்சாயத்தில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

ராமர் கோவில் நன்கொடை : ‘ஹிட்லரின் நாஜிக்கள் செய்ததை ஆர்.எஸ்.எஸும் செய்தால் நாடு என்னாகும்?’ – எச்.டி.குமாரசாமி

அக்கூட்டத்தில் பேசிய அவர், “பிரதமர் மோடி தன்னுடைய சிரிப்பால், உங்களை (விவசாயிகளை) அவமதித்திருக்கிறார். உயிரிழந்த 215 விவசாயிகளில் ஒருவர் 25 வயதுடையவர். அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கிறார்கள். அவரது தாயார் கண்ணீருடன் வாழத்தொடங்கிவிட்டார். ஆனால், அவர்(மோடி) சிரித்துக்கொண்டிருக்கிறார். அவரின் அமைச்சர்கள் விவசாயிகளைத் தேசதுரோகிகள் என்று அழைக்கிறார்கள். தேசபக்தர்களையும் தேச விரோதிகளையும் வேறுபடுத்திப் பார்க்க மோடியால் முடியாது.” என்று  அவர் விமர்சித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘கைதுகள், வழக்குகள், நோட்டீசுகள் – எங்களை பின்னோக்கி இழுக்காது’ : போராடும் விவசாயிகள் உறுதி

மேலும் பேசிய பிரியங்கா காந்தி, “ஆட்சிக்கு வந்தபின், ரூ .15,000 கோடி மதிப்புள்ள கரும்புக்கான நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்வதாகக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்றவில்லை. ஆனால், இதே பிரதமர் ரூ .16,000 கோடி மதிப்புள்ள இரண்டு விமானங்களை வாங்கியுள்ளார்.” என்று பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். “விவசாய சட்டங்கள், விவசாயிகளின் நலனுக்காகவே என்று வைத்துக் கொள்வோம்.  விவசாயிகள் அதைத் தாங்கள் விரும்பவில்லை என்று சொன்னால், அரசு அவற்றைத் திரும்பப் பெற வேண்டும்தானே? இந்த நாட்டின் விவசாயிகளைவிட, அரசுக்கு விவசாயத்தைப் பற்றி அதிகம் தெரியுமா? ” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

‘இந்தப் பொற்கால ஆட்சியில் மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்கள் இயற்றப்படும்’ – குஜராத் முதல்வர் விஜய் ருபனி

“இந்தப் புதிய சட்டங்கள்மூலம் பயிர்களுக்கான விலையைக் கார்ப்பரேட்டுகள் கட்டுப்படுத்துவர். இது கார்ப்பரேட்டுகளுக்கு எதிராகவுள்ள எல்லா சட்டங்களையும் இல்லாமல் ஆக்கும் ஒரு சட்டம் ஆகும். மோடி ஜி, ட்ரம்ப்புக்கு பிரச்சாரம் செய்ய அமெரிக்காவிற்கு செல்வார். சீனா, பாகிஸ்தான் போன்ற பல நாடுகளுக்குப் பயணம் செய்வார். ​​ஆனால், தனது வீட்டிலிருந்து 2-3 கி.மீ தூரத்தில் உள்ள விவசாயிகளுடன் ஏன் பேச முடியாது?” என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  தெரிவித்துள்ளது.

‘தேசபக்தர்களுக்கும் தேசவிரோதிகளுக்கும் வித்தியாசம் தெரியாத மோடி’ – பிரியங்கா காந்தி விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்