கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியில், இன்னும் சில நாட்களில் பெரிய அளவில் தனியார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, நிதி ஆயோக்கின் உறுப்பினர் வி.கே.பால் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது நாளொன்றிற்கு 10,000 தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டால், அதில் 2,000 தடுப்பு மருந்துகள் தனியாரால் வழங்கப்படுவதாகவும், தனியாரின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்ததாக என்டிடிவி கூறியுள்ளது.
கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்
தடுப்பு மருந்து கொடுக்கும் பணி வேகப்படுத்தப்படும்போது, தனியாரின் பங்களிப்பு மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ள வி.கே.பால், இன்னும் சில தினங்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) தலைவர் உதய் கோட்டக், பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், பணம் கொடுப்பவர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்குவதற்கு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
பதஞ்சலி கொரோனில் தடுப்பு மருந்து : நாங்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு
தற்போது இந்தியாவில் சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் மருத்துவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக் தடுப்பு மருந்திற்கு அவசர அனுமதிகோரி, ரெட்டிஸ் லெப்பாரட்ரீஸ் (Reddy’s Laboratories) நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்குவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, வி.கே.பால் என்டிடிவி-யிடம் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.