முஹம்மது நபிகள் தொடர்பாக பாஜக பிரமுகர்கள் கருத்து தெரிவித்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காத்து வருவது தற்செயலானதல்ல, அதில் ஏதோ அர்த்தம் உள்ளது என்று இந்திய குடியரசு முன்னாள் துணைத் தலைவர் முகமது ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.
பிபிசி ஊடகத்தின் இந்தி பிரிவிடம் அவர் தெரிவித்த கருத்தில், ”இது மிகவும் முக்கியமான விசயம்” என்று கூறியுள்ளார்.
அரபு நாடுகளுடனான பிரதமர் மோடியின் உறவு குறித்து பேசிய அன்சாரி, “பல நாடுகளுடன் பல தொடர்புகளைக் கொண்டிருக்கும் தற்போதைய பிரதமர் இந்த விஷயத்தில் காத்து வரும் மௌனம், தற்செயலானது அல்ல. ஒன்று பிரதமர் அதில் உடன்படவில்லை என்று அர்த்தம் கொள்ளலாம் அல்லது குறைந்தபட்சம் அதை அவர் ஒப்புக்கொள்கிறார் என்றும் கூறலாம். இந்த விஷயத்தில் வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து இன்னும் வரவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக செய்தித் தொடர்பாளர்களின் கருத்தானது, முஹம்மது நபியின் ஆளுமை மீதான தாக்குதல். இதை உலகில் எந்த இஸ்லாமியரும் பொறுத்துக்கொள்ள மாட்டார் என்று ஹமீது அன்சாரி தெரிவித்துள்ளார்.
Source: BBC Tamil
அம்பேத்கருக்கு எதிராக கலவரம் செய்த சாதிவெறியர்கள் | Amalapuram Ambedkar Issue | Andhra Pradesh | MLA
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.