Aran Sei

ஹைதராபாத் வருகை தரும் பிரதமர் மோடி – நிகழ்ச்சியை புறக்கணித்த தெலுங்கானா முதலமைச்சர்

ந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் (ஐஎஸ்பி) எனும் உயர்கல்வி நிறுவனத்தின் 20வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஹைதராபாத் வருகை தர இருக்கிறார். மோடியைச் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு ஜே.டி.(எஸ்) தலைவரும் முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடாவைச் சந்திக்க தெலுங்கானா முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் பெங்களூரு செல்கிறார்.

பிப்ரவரி 5 ஆம் தேதி ஹைதராபாத் அருகே உள்ள ராமானுஜாச்சாரியாரின் மாபெரும் சிலையான சமத்துவச் சிலையைத் திறக்க பிரதமர் வந்தபோதும், பிரதமரை முதலமைச்சர் சந்திக்கவில்லை. தற்போது நடைபெறுவது இரண்டாவது முறையாகும்.

பாலியல் தொழிலாளர்களை கண்ணியமான நடத்துங்கள், துன்புறுத்தாதீர்கள் – அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

“இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்” என்று அழைக்கப்படும் உயர்கல்வி அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மேலும், 2022 ஆம் ஆண்டு முதுகலை திட்ட வகுப்பின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற இருக்கிறார்.

பிரதமர் மோடியின் பயணத்தின் போது முதல்வர் சந்திரசாகர் ராவ் மாநிலத்தில் இருக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியானதை அடுத்து பாரதிய ஜனதா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

Source: News18

 

ஹைதராபாத் வருகை தரும் பிரதமர் மோடி – நிகழ்ச்சியை புறக்கணித்த தெலுங்கானா முதலமைச்சர்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்