Aran Sei

ஹிட்லரையே பிரதமர் மோடி மிஞ்சிவிட்டார் – காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய் விமர்சனம்

டால்ஃப் ஹிட்லரைப் போல் பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொள்கிறார் என்றும், ஜெர்மன் சர்வாதிகாரியின் பாதையில் சென்றால் ஹிட்லரைப் போலவே அவரும் சாவார் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சருமான சுபோத் காந்த் சஹாய் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் நடந்த காங்கிரஸ் கட்சியின்  சத்யாகிரக  போராட்டத்தில், பிரதமருக்கு எதிரான எந்த அநாகரீகமான கருத்துக்களையும் ஏற்கவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

அக்னிபத் விவகாரம்: மக்களிடம் பாஜக தன்னுடைய அடித்தளத்தை இழந்துள்ளது – மாயாவதி, அகிலேஷ் யாதவ் விமர்சனம்

பாஜக ஆட்சியை கொள்ளையர்களின் அரசாங்கம் என்று  சுபோத் காந்த் சஹாய்  குறிப்பிட்டுள்ளார். “இது கொள்ளையடிப்பவர்களின் அரசு, மோடி ரிங்மாஸ்டர் போல் செயல்படுகிறார். ஆனால், அவர் சர்வாதிகாரி வேடத்திற்குத்தான் பொருந்தியுள்ளார்: என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஹிட்லரையும் பிரதமர் மோடி மிஞ்சிவிட்டதாக உணர்கிறேன். ராணுவத்திற்குள் இருந்து ‘காக்கி’ என்ற அமைப்பை ஹிட்லர் உருவாக்கினார். ஹிட்லரின் வழியை மோடி பின்பற்றினால், ஹிட்லரைப் போல் செத்து மடிவார்.  இதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மோடி அரசின் சர்வாதிகார மனப்பான்மை மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று எழுதியுள்ளார்.

டெல்லி : அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரகப் போராட்டம்

“ஆனால் பிரதமருக்கு எதிரான எந்த அநாகரீகமான கருத்துக்களையும் காங்கிரஸ் அங்கீகரிக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

காந்திய கொள்கைகளின்படி கட்சியின் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

Source: The Ndtv

Agnipath க்கு எதிரா போராடுவரங்க மேல Bulldozer பாயுமா? Congress Peter Alphonse Interview

ஹிட்லரையே பிரதமர் மோடி மிஞ்சிவிட்டார் – காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய் விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்