Aran Sei

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் தனித்தனி இந்தியாவை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி விமர்சனம்

ணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் தனித்தனி இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.  மேலும் நாட்டின் வளங்கள் ஒரு சில பணக்காரர்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. அதையொட்டி தஹோத் மாவட்டத்தில் ஆதிவாசி சத்தியாகிரகப் பேரணியைத் தொடங்கி வைத்த அவர், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ராஜபக்சே ராஜினாமா: ராஜபக்சே வீட்டை கொளுத்திய போராட்டக்காரர்கள்

“2014-ல் நரேந்திர மோடி ஜி இந்தியாவின் பிரதமரானார். அதற்கு முன் அவர் குஜராத் முதல்வராக இருந்தார். குஜராத்தில் அவர் தொடங்கிய பணியைத்தான் நாடு முழுக்க செய்து வருகிறார். அது குஜராத் மாடல் என்று அழைக்கப்படுகிறது,” என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

“இன்று இரண்டு இந்தியா உருவாகி இருக்கிறது. ஒன்று பணக்கார்களின் இந்தியா மற்றொன்று ஏழைகளின் இந்தியா.  பணக்காரர்களின் இந்தியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அதில், கோடீஸ்வரர்கள், அதிகாரம் படைத்தவர்கள் மற்றும் பணம் படைத்த அதிகாரிகள் உள்ளனர். இரண்டாவது இந்தியாவில் சாதாரண ஏழை மக்கள் உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு இந்தியாவையும் காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்று தெரிவித்த அவர், மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு பழங்குடியினரின் உரிமைகளை பறித்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்ப்பு

“பாஜக அரசு உங்களுக்கு எதையும் தராது, உங்களிடமிருந்து அனைத்தையும் பறிக்கும். நீங்கள் (பழங்குடியினர்) உங்களுக்கான உரிமைகளை அவர்களிடமிருந்து(பாஜக) பிடுங்க வேண்டும்; அப்போதுதான் உங்களுக்குச் சொந்தமானது கிடைக்கும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

“குஜராத்தில் உள்ள சாலைகள், பாலங்கள், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை உங்களது(பழங்குடியினர்)  கடின உழைப்பால் உருவாக்கியுள்ளீர்கள். ஆனால் அதற்கு ஈடாக உங்களுக்கு என்ன கிடைத்தது? உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நல்ல கல்வி அல்லது சுகாதார சேவை எதுவும் இல்லை,” என்று அவர் கூறியுள்ளார்.

தருமபுர ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி: திமுக அரசின் முற்போக்கு திட்டங்களை மிரட்டிப் பணிய வைக்கும் காவித் திட்டம் என கி.வீரமணி விமர்சனம்

கொரோனா தொற்றுநோயைக்  கையாண்ட பாஜக அரசு குறித்து பேசிய அவர், “குஜராத்தில் மூன்று லட்சம் பேர்  தொற்றுநோயின்போது இறந்தனர். அப்போது,​​​​ பால்கனிகளில் இருந்து கைகளைத் தட்டுங்கள்; எண்ணெய் இட்டு விளக்கு ஏற்றுங்கள் அல்லது மொபைல் விளக்குகளை ஒளிரச் செய்யுங்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார். கங்கை நதியில் இறந்த உடல்கள் மிதந்தன. இந்தியாவில், 50 முதல் 60 லட்சம் பேர் வரை கொரோனாவால் இறந்தனர்” என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Source: newindianexpress

தமிழக ஊடகங்களை பணிய வைக்க பாஜகவின் புதிய முயற்சி | Tamil News Media | L Murugan | Anurag Thakur

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் தனித்தனி இந்தியாவை உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி – ராகுல் காந்தி விமர்சனம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்