பிரதமர் மோடி உண்மையை ஏற்க எப்போதும் தயாராக இல்லை. அவர் ஒரு சர்வாதிகாரியைப் போலப் பாராட்டுக்களை மட்டுமே கேட்க விரும்புகிறார். உண்மையையும் விமர்சனத்தையும் ஏற்க அவர் தயாராக இல்லை” என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி சாடியுள்ளார்.
“சத்யபால் மாலிக் மேகாலயாவின் ஆளுநராக உள்ளார். ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட அவர் அரசியலமைப்புச் சட்டப்படி பதவியில் இருக்கிறார். உங்களால்தான் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் விவசாயிகள் உயிரிழந்தார்கள் என நான் பிரதமர் மோடியிடம் கூறியதற்கு அவர் கோபமடைந்ததாக சத்யபால் சொல்வதை நாம் நம்பாமல் இருக்க முடியாது. பிரதமர் மோடி உண்மையைக் கேட்கத் தயாராக இல்லை என்று ஆளுநரே கூறுகிறார் என்று ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அசாசுதீன் ஒவைசி கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உத்தரகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைவோம் என்ற அச்சத்தில் தான் ஒன்றிய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. இந்தியாவில் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருவதையும், பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற கசப்பான உண்மைகளையாவது மோடி கவனிப்பார் என நான் நம்புகிறேன்.
Source : Business Standard
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.