Aran Sei

பிரதமரே! நுபுர் ஷர்மாவின் கருத்து சரிதானா என்று உங்கள் பால்ய நண்பர் அப்பாஸிடம் கேளுங்கள் – ஓவைசி வலியுறுத்தல்

முஹம்மது நபி குறித்த பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவின் கருத்து ஆட்சேபனைக்குரியதா இல்லையா என்று பிரதமர் நரேந்திர மோடியின் பால்ய நண்பர் அப்பாஸிடம் கேட்க வேண்டும் என்று அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார்.

முன்னதாக, தனது தாயார் ஹீராபென் மோடியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு எழுதிய வலைப்பதிவில், தன்னுடைய பால்யகால நண்பரான அப்பாஸின் நினைவுகளை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

அக்னிபத் வீரர்களுக்கு பாஜக அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலைக்கு முன்னுரிமை – பாஜக தேசியச் செயலாளர் கருத்திற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்

அதில், “என் தந்தையின் நெருங்கிய நண்பர் ஒருவர் பக்கத்து கிராமத்தில் தங்கியிருந்தார். அவரின் அகால மரணத்திற்குப் பிறகு, எனது தந்தை தனது நண்பரின் மகன் அப்பாஸை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்பாஸ் எங்களோடு தங்கி படிப்பை முடித்தார். அப்பாஸ் மீது அம்மா பாசமும் அக்கறையும் கொண்டிருந்தார். எங்கள் எல்லா சகோதரர்களுக்கும் செய்ததைப் போலவே, ஒவ்வொரு ஆண்டும் ஈத் அன்று, அப்பாஸுக்கு பிடித்தமான உணவுகளை எனது அம்மா தயாரிப்பார்,” என்று மோடி எழுதியிருந்தார்.

இப்பதிவு குறித்து பேசிய ஒவைசி, “எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் தனது நண்பரை நினைவு கூர்ந்துள்ளார். உங்களுக்கு இந்த நண்பர் இருப்பது எங்களுக்குத் தெரியாது. பிரதமரிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம், தற்போது அப்பாஸ் இருந்தால் அவரை அழைக்கவும். அசாதுதீன் ஒவைசி மற்றும் உலமாக்களின் (மதத் தலைவர்கள்) உரைகளை கேட்கச் சொல்லுங்கள். பின்னர் நாங்கள் பொய் சொல்லுகிறோமா என்று அப்பாஸிடம் கேளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டம்: போராடும் இளைஞர்கள் போலி தேச பக்தர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் – பிரியங்கா காந்தி

“நீங்கள் அவரின் (அப்பாஸ்)முகவரியைப் பகிர்ந்து கொண்டால், நான் அப்பாஸிடம் செல்வேன். நபிகள் நாயகத்தைப் பற்றி நூபுர் ஷர்மா கூறியது ஆட்சேபனைக்குரியதா இல்லையா என்று நான் அவரிடம் கேட்பேன். நுபுர் ஷர்மா மிக மோசமாக பேசியதாக அவர் அவர் ஒப்புக்கொள்வார்” என்று அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி  தெரிவித்துள்ளார்.

Source: ndtv

உன் அப்பன் வீட்டு சொத்தா? | கோவிலை ஆட்டய போட பாஜக சதி | Maruthaiyan Speech

பிரதமரே! நுபுர் ஷர்மாவின் கருத்து சரிதானா என்று உங்கள் பால்ய நண்பர் அப்பாஸிடம் கேளுங்கள் – ஓவைசி வலியுறுத்தல்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்