Aran Sei

எம்.பி.பி.ஸ் சேர்க்கைக்கு நடைமுறை ஆங்கில அறிவு அவசியம் – உச்சநீதிமன்றம் கருத்து

எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கு முக்கிய தகுதியாக மேல்நிலைக்கல்வி உயிரியல் அறிவும், நடைமுறை ஆங்கில அறிவும் பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துக் கலோஜி நாராயண ராவ் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எஸ்.ரவீந்தர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கலவரத்தில் நடந்த கொலை: இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக சாட்சியளித்துள்ள இந்து குடும்பங்கள்

தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு தேவையான பாடங்கள் பயின்றது தொடர்பான சான்றிதழ்களைச் சமர்பிக்கவில்லை என்ற அடிப்படிடையில் 2020-21 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கை மறுக்கப்பட்டது சட்டவிரோதமானது என்ற மாணவியின் வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், “எம்.பி.பி.எஸ் படிப்பிற்கு தேவையானமுக்கியமான தகுதி, மேல்நிலையை கல்வி உயிரியல் பாடத்தின் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவை உள்ளடக்கியது” என உறுதி செய்தததாக தி இந்து தெரிவித்துள்ளது.

விளைந்த பயிர்களை அழிக்க வேண்டாம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் வேண்டுகோள்

நீதிபதி எஸ்.ரவீந்திர பட், தனது தீர்ப்பில், “1997 ஆம் ஆண்டின் மருத்துவ பட்டபடிப்பிற்கான இந்திய மருத்துவ கவுன்சில் ஒழுங்குமுறைகளின் 4வது ஒழுங்குமுறையைக் குறிப்பிட்டுள்ளார். இது எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்வதற்கான தகுதியின் அளவுகோலாக ஒரு மாணவர் மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியல், உயிரியல் அல்லது உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களைப் பயின்றிருக்க வேண்டும் எனக் கூறுகிறது” எனத் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”ஒரு மாணவர் இயற்பியல், வேதியல், உயிரியல் தொடர்பான பாடப்பிரிவுகளில் தத்துவார்த்த மற்றும் நடைமுறை அறிவை பெற்றிருப்பதோடு, நடைமுறை ஆங்கில அறிவையும் பெற்றிருக்க வேண்டும். இதுவே எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான தகுதியின் முக்கிய பகுதி” என நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

 

எம்.பி.பி.ஸ் சேர்க்கைக்கு நடைமுறை ஆங்கில அறிவு அவசியம் – உச்சநீதிமன்றம் கருத்து

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்