Aran Sei

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ‘ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்’ என்று விமர்சித்து போஸ்டர் ஒட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா: வழக்குப் பதிந்த காவல்துறை

மே 12 அன்று மதுரையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்று விமர்சித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து மதுரையின் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் அமைப்பின் நிர்வாகிகளான முகமது அபுதாஹிர் மற்றும் சையத் ஐசக் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா ஒரு ஆபத்தான அமைப்பு என்றும், அது இந்நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கிறது என்றும் மே 6 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தது பெரிய பரபரப்பையும் எதிர்ப்பையும் சந்தித்தது.

“ஆளுநர் அவர்களே ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாக நின்று மக்கள் இயக்கங்களுக்கு எதிராக வன்மத்தை காட்டாதே என்றும் தொடர்ந்து தமிழக நலன்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெறு” என்று சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்தது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா குறித்த தமிழக ஆளுநரின் கருத்து: ஆர்.எஸ்.எஸின் திட்டத்தை செயல்படுத்துவதாக திருமாளவன் குற்றச்சாட்டு

இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் அமைப்பின் மாநிலத் தலைவர் முகமது ஷேக் அன்சாரி, தமிழக ஆளுநர் வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Source : india today

பிரியாணி தடை திமுக ஆட்சியை முடக்கும் சதி | Sangathamizhan Interview

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ‘ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்’ என்று விமர்சித்து போஸ்டர் ஒட்டிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா: வழக்குப் பதிந்த காவல்துறை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்